ஆசிரியர்களைப் பாதிக்கும் விதிமுறைகள்

ஆசிரியர்களைப் பாதிக்கும் விதிமுறைகள்

2 mins read
1168e2cd-afe9-4cd4-858c-22d898673599
-

பெய்­ஜிங்: சீனா­வில் பல கால­மாக ஆங்­கி­லம் கற்­றுத் தரு­வ­தற்­கான தேவை அதி­க­மாக இருந்து வந்­திருக்­கிறது. அத­னால் சீனா­வில் பிற மொழி­க­ளைக் கற்­றுத் தரும் சேவை­களை வழங்­கும் பல துணைப்பாட நிறு­வ­னங்­கள் பல­ன­டைந்து வந்­தன. ஒரு தேர்­வின் முடி­வால் மாண­வ­ரின் எதிர்­கா­லம் மாற்­றி­ய­மைக்­கப்­ப­ட­லாம். அப்­ப­டிப்­பட்ட கல்வி முறை இருக்­கும் நாட்­டில் தங்­கள் பிள்­ளை­களை முன்­னோக்­கிச் செல்ல வைக்­கப் பல பெற்­றோர் அத்­த­கைய நிறு­வ­னங்­க­ளின் சேவை­களை நாடி­னர்.

ஆனால் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து துணைப்­பாட ஆசி­ரி­யர்­களை வேலைக்கு எடுக்­கக்­கூ­டாது என்ற சட்­டத்­தைச் சீனா சென்ற மாதம் நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது. மேலும், துணைப்­பா­டச் சேவை­களை வழங்­கும் நிறு­வ­னங்­களும் தளங்­களும் தங்­க­ளின் வர்த்­தக முறையை லாப நோக்­க­மற்­ற­தாக மாற்­ற­வேண்­டும். மாண­வர்­க­ளின் மன­வு­ளைச்­ச­லை­யும் கல்­விச் செல­வை­யும் குறைக்­கப் புதிய விதி­மு­றை­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக பெய்­ஜிங் கூறி­யது.

பெற்­றோர் எதிர்­கொள்­ளக்­கூ­டிய நெருக்­கு­த­லைக் குறைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தைப் புரிந்து­கொள்ள முடிந்­தா­லும் அது ஏன் திடீ­ரென நடை­மு­றைப்­ப­டுத்­தப் பட­வேண்­டும் என்­றும் ஏன் இவ்­வ­ளவு கடு­மை­யாக இருக்­க­வேண்­டும் என்­றும் சில ஆசி­ரி­யர்­கள் கேட்­கின்­ற­னர்.

ஆனால் வெளி­யி­லி­ருந்து எந்­தத் தாக்­க­மும் பிள்­ளை­கள் மீது விழா­மல் இருக்­கத்­தான் இத்­த­கைய நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படு­வ­தாக விமர்­ச­கர்­கள் கூறு­கின்­ற­னர். வகுப்­ப­றை­களில் சோஷி­ய­லிஸ்ட் சித்­தாந்­தத்தைச் செயல்­ப­டுத்த பெய்­ஜிங் முயற்சி செய்­வ­தா­க­வும் சொல்­லப்­ப­டு­கிறது.

2017ஆம் ஆண்­டில் வெளி­நாடு­க­ளி­லி­ருந்து வந்த 400,000 ஆசி­ரியர்­கள் சீனா­வில் வேலை செய்­து­கொண்­டி­ருந்­த­னர்.

எனி­னும், கொவிட்-19 சூழ­லா­லும் எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் கடுமை­யாக்­கப்­பட்­ட­தா­லும் அவர்­களில் சிலர் சீனா­வை­விட்டு வெளி­யே­றி­விட்­ட­னர்.

பேச்­சுப் பாடங்­களை வெளி­நாட்டு ஆசி­ரி­யர்­கள் நடத்­து­வ­தையே பல சீனப் பெற்­றோர் விரும்­பு­கின்­ற­னர். குறிப்­பாக ஆங்­கி­லப் பாடங்­க­ளுக்கு இது பொருந்­தும். ஆங்­கில துணைப்­பாட வகுப்­பு­களுக்­கான தேவை சீனா­வில் பெரிய அள­வில் இருப்­ப­தால் இதன் தொடர்­பில் அங்கு கள்­ளச் சந்தை வளர்ந்து வரு­வ­தா­க­வும் துணைப்­பாட ஆசி­ரி­யர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

புதிய விதி­மு­றை­க­ளைக் கருத்தில்­கொண்டு சீனா­வில் வாழும் வெளி­நாட்டு ஆசி­ரி­யர்­களை வேலைக்கு எடுக்­கும் முயற்­சி­யி­லும் சில நிறு­வ­னங்­கள் இறங்கி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.