அமெரிக்காவில் தடம்புரண்ட ரயில் - மூவர் மரணம்

அமெரிக்காவில் தடம்புரண்ட ரயில் - மூவர் மரணம்

1 mins read
0ed186fd-ea89-4633-a260-f76ec8af10ad
-

அமெரிக்காவின் மொண்டேனா நகரில் ரயில் ஒன்று தடம்புரண்ட சம்பவத்தில் குறைந்தது மூவர் மாண்டனர். மேலும் 50 பேர் காயமடைந்தனர்.

'எம்பையர் பிள்டிங்' என்ற ரயிலின் எட்டுப் பெட்டிகள் பிற்பகல் 4 மணிக்குத் தடம்புரண்டன. சிக்காகோவிலிருந்து புறப்பட்ட அந்த ரயில், சியேட்டலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

ரயிலில் சுமார் 141 பயணிகனும் 16 பணியாளர்களுமே இருந்தனர்.

சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.