இந்தோனீசிய தடுப்பூசி திட்டத்திற்குத் தொடர் தடைகள்

இந்தோனீசிய தடுப்பூசி திட்டத்திற்குத் தொடர் தடைகள்

2 mins read
46cbfe26-6975-4456-90a0-bc7cdf5f18f8
-

ஜக்­கார்த்தா: சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்­கான தட்­டுப்­பா­டும் தள­வா­டச் செயல்­பாட்­டில் குறை­பாடும் ஏற்­பட்டு வரும் நிலை­யில், கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூசியை இந்­தோ­னீ­சியா தன் மக்­களுக்­குப் போடு­வ­தில் சிர­மத்தை எதிர்­நோக்­கு­கிறது.

தென்­கி­ழக்­கா­சி­யா­வில் தடுப்­பூசித் திட்­டத்­தைத் தொடங்­கிய நாடு­களில் இந்­தோ­னீ­சி­யா­வும் ஒன்­றாக இருந்­தது. ஆனால், இன்று அதன் அண்­டை­நா­டு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் தடுப்­பூ­சிப் பணி­யைத் துரி­த­மாக மேற்­கொள்ள முடி­யா­மல் தவிக்­கிறது இந்­தோ­னீ­சியா.

இந்­தோ­னீ­சி­யா­வின் 270 மில்­லி­யன் மக்­களில் 17.9 விழுக்­காட்­டி­ன­ருக்­கு மட்­டுமே தடுப்­பூசி முழு­மை­யா­கப் போடப்­பட்­டுள்­ளது.

பொரு­ளி­யல் ரீதி­யாக வட்­டாரத்­தின் பிர­தான நாடு­க­ளைக் காட்­டி­லும் இந்­தோ­னீ­சியா பின்­தங்கி இருப்­ப­தாக புளூம்­பெர்க் தடுப்­பூ­சிக் கண்­கா­ணிப்­புப் பிரிவு தெரி­வித்து உள்­ளது.

தடுப்­பூ­சிப் பணி­கள் மெது­வடைந்­துள்ள நிலை­யில், கொள்ளை­நோ­யைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்­கும் இந்­தோ­னீ­சி­யா­வின் முயற்­சி­கள் கைகூ­டா­மல் போக­லாம். $1.1 டிரில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் மதிப்­பு­டைய அதன் பொரு­ளி­யலை மீட்­டுத் தக்­க­வைத்­துக்­கொள்­ளா­ம­லும் போக­லாம். டெல்டா கிரு­மிப் பர­வ­லா­லும் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

முதல் தடுப்­பூ­சியை மட்­டும் கிட்­டத்­தட்ட 32 விழுக்­காட்­டி­னர் போட்­டுக்­கொண்­டுள்ள நிலை­யில் நாடு­களின் பட்­டி­ய­லின் இறுதி நான்கு இடங்­களில் இந்­தோ­னீ­சியா இடம்­பெற்­றுள்­ளது.

போது­மான தடுப்­பூசி இருப்­பு­கள் இருந்­தா­லும் தடுப்­பூசி போடும் மையங்­கள் போது­மா­ன­தாக இல்லை என்­றும் தடுப்­பூ­சி­யைப் போடு­வ­தற்­குப் போது­மான பணி­யா­ளர்­கள் அவ்­வி­டத்­தில் இருப்­ப­தில்லை என்­றும் இந்­தோ­னீ­சிய அர­சாங்­கத்­திற்கு உத­வி­வ­ரும் கிரி­ஃப்­பித் பல்­க­லைக்­க­ழ­கத் தொற்­று­நோய் நிபு­ணர் டிக்கி புடி­மேன் கூறி­னார்.

ஒரு நாளில் ஒரு மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட தடுப்­பூ­சி­க­ளைப் போட­வேண்­டும் என்ற இலக்­கு­டன் இந்­தோ­னீ­சிய அர­சாங்­கம் செயல்­பட்டு வரு­கிறது. ஆண்டு இறு­திக்­குள் 70 விழுக்­காட்­டி­ன­ருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டி­ருக்­கும் என்ற எதிர்­பார்ப்­பும் நில­வி­வ­ரு­கிறது.

இந்­தோ­னீ­சி­யா­வில் தின­மும் 100க்கும் மேற்­பட்ட கொவிட்-19 உயி­ரி­ழப்­பு­கள் பதி­வா­கின்­றன.