ரயில் தடம் புரண்டதில் குறைந்தது மூவர் பலி

ரயில் தடம் புரண்டதில் குறைந்தது மூவர் பலி

2 mins read
0226e873-f07d-480a-93be-205972c6fff5
தண்டவாளம் அருகே சிதறிய மூட்டைகளுடன் ரயில் பயணிகள் காத்திருக்கும் காட்சி. படம்: ராய்ட்டர்ஸ் -

நியூயார்க்: அமெ­ரிக்­கா­வின் மொன்­டேனா பகு­தி­யில் ரயில் ஒன்று தடம் புரண்­ட­தில் குறைந்­தது மூன்று பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். அதோடு 50க்கும் மேற்­பட்­டோர் காய­ம­டைந்­த­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

சிகா­கோ­வி­லி­ருந்து சியேட்­டலுக்­குச் சென்­று­கொண்­டி­ருந்த 'எம்­பயர் பில்­டர்' வகை ரயில் ஒன்­றின் பெட்­டி­கள் தடம் புரண்­ட­தாக 'எம்ட்­ரேக்' நிறு­வ­னம் தெரி­வித்­தது.

சம்­ப­வம் நடந்­த­போது கிட்­டத்­தட்ட 141 பய­ணி­களும் 16 பணி­யா­ளர்­களும் ரயி­லில் இருந்­த­தாக நிறு­வ­னம் அதன் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

பெட்­டி­களில் சிக்கி இருந்­த­வர்­களை வெளி­யேற்­று­வ­தற்­காக மீட்­புப் படை­யி­னர் துரி­த­மா­கச் செயல்­பட்­ட­னர் என்று கூறப்­பட்­டது. இதற்­கி­டையே, சம்­ப­வம் தொடர்­பில் தேசிய போக்­கு­வ­ரத்­துப் பாது­காப்புக் கழ­கம் விசா­ரணை மேற்­கொள்­ளும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

பெட்­டி­களில் உயி­ரு­டன் இருந்த அனை­வ­ரும் மீட்­கப்­பட்­டு­விட்­ட­தாக அப்­ப­கு­தி­யின் பேரி­டர், அவ­ச­ர­கால சேவை­கள் ஒருங்­கி­ணைப்­பா­ளர் அமேண்டா ஃபிரிக்­கல் கூறி­னார்.

இந்­நி­லை­யில், ரயில் சேவை­களை ஒரு சில பகு­தி­களில் ரத்து செய்­வ­தாக எம்ட்­ரேக் அறி­வித்­தது.

எம்ட்­ரேக் ரயில்­கள் தடம் புரள்­வது அரிது என்­றா­லும் அண்­மைய ஆண்­டு­களில் உயிர்ச் சேதம் ஏற்­பட்ட இது­போன்ற சம்­ப­வங்­கள் நிகழ்ந்­துள்­ளன.

சவுத் கரோ­லி­னா­வில் தவ­றான தடத்­தில் சென்ற எம்ட்­ரேக் ரயில் ஒன்று, நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த சரக்கு ரயில் மீது மோதிய சம்­ப­வம் 2018ஆம் ஆண்­டில் நடந்­தது. அதில் மூவர் உயி­ரி­ழந்­த­னர். அதே ஆண்­டில் வர்­ஜீ­னியா பகு­தி­யில் குப்பை அகற்­றும் வாக­னம் ஒன்­றின் மீது ரயில் மோதி­யது. வாக­னத்­தில் இருந்த ஒரு பயணி உயிர் இ­ழந்­தார்.

2015ல் அனு­ம­திக்­கப்­பட்ட வேகக் கட்­டுப்­பாட்டை விட இரு­ம­டங்கு வேகத்­தில் சென்ற ஓர் எம்ட்­ரேக் ரயில், ஃபிலடெல்­ஃபி­யா­வில் வளை­வுப்­ப­கு­தி­யில் தடம் புரண்­டது. எட்டு பேர் அதில் பலி. 200க்கும் மேற்­பட்­டோ­ருக்­குக் காயம்.