பொருளியலை மீட்பதற்காக கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் வியட்னாம்

ஹனோய்: முடக்­க­நி­லை­யில் நீண்ட கால­மாக இருந்து வந்­ததை அடுத்து வியட்­னா­மின் பொரு­ளா­தா­ரத்தை மீட்­ப­தற்­காக கொரோனா கிருமி தொடர்­பான கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்த உள்­ள­தா­க­வும் மீண்­டும் செயல்­பட வர்த்­த­கங்­களை அனு­ம­திக்­க­வுள்­ள­தா­க­வும் அந்­நாட்டு பிர­த­மர் ஃபாம் மின் சின் தெரி­வித்­துள்­ளார்.

கிரு­மி­யைக் கட்­டுக்­குள் வைத்­திருப்­ப­தில் உல­கி­லேயே சிறந்த நாடு­களில் ஒன்­றாக ஏப்­ரல் மாதம் வரை வியட்­னாம் இருந்­தது.

ஆனால் கிரு­மி­யல்­லாத கொள்­கை­யைத் தக்­க­வைத்­துக்­கொள்ள முயல்­வ­தற்­குப் பதி­லாக கிரு­மி­யு­டன் ஒரே சூழ­லில் வாழும் நிலை­யைத் தற்­போது ஏற்­றுக்­கொண்­டுள்­ளது அது.

உற்­பத்­தித் துறை சார்ந்த பொரு­ளி­ய­லாக வியட்­னாம் இருக்க, கிரு­மிப் பர­வல் மற்­றும் நட­மாட்­டம் தொடர்­பான கட்­டுப்­பா­டு­க­ளால் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டது. இத­னால் சில தொழிற்­சா­லை­கள் மூட­வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

அர­சாங்­கச் சந்­திப்பு கூட்­டம் ஒன்­றில் பிர­த­மர் சின், "இம்­மா­தம் 30ஆம் தேதி வாக்­கில், பாது­காப்­பு­டைய இடங்­களில் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­ட­லாம். அத்­து­டன் வர்த்­தக, சமூக நட­வ­டிக்­கை­கள் மீண்­டும் தொடங்­க­லாம்," என்­றார்.

கொள்­ளை­நோய் ஓர­ள­வுக்­குக் கட்­டுக்­குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்ட அவர், கொள்­ளை­நோய்க்கு எதி­ரா­கச் செயல்­ப­டு­வ­தற்கு வெறும் தடுப்­பு­க­ளை­யும் கட்­டுப்­பா­டு­க­ளை­யும் மட்­டும் இடு­வது ஆகாது என்­றார்.

கிட்­டத்­தட்ட 98 மில்­லி­யன் மக்­கள்­தொகை கொண்­டுள்ள வியட்­னா­மில், தடுப்­பூ­சித் திட்­டம் துரி­த­மாக்­கப்­பட்­டுள்­ளது.

தின­மும் 700,000 பேருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்டு வரு­கிறது. இருப்­பினும் அதன் 7.61% தடுப்­பூசி விகி­தம், வட்­டார நாடு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் மிகக் குறை­வா­கவே உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!