புதைபடிவ எரிபொருளை கைவிடுதல்: கடப்பாடு தெரிவிக்க மறுப்பு

புதைபடிவ எரிபொருளை கைவிடுதல்: கடப்பாடு தெரிவிக்க மறுப்பு

1 mins read
cebe51ce-ac3a-4eb6-81a5-6186f65c8426
-

மெல்பர்ன்: பருவநிலை தொடர்பில் முக்கிய மாநாடு ஒன்று நடைபெறவுள்ள நிலையில், புதைபடிவ எரிபொருள்களை கட்டம் கட்டமாகக் கைவிடும் திட்டத்திற்குத் தம் கடப்பாட்டைத் தெரிவிக்க ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் மறுத்துள்ளார். உலகிலேயே ஆக அதிகமான நிலக்கரியை ஏற்றுமதி செய்யும் நாடு ஆஸ்திரேலியா. வாயு ஏற்றுமதி செய்யும் பிரதான நாடாகவும் அது உள்ளது.

இதற்கிடையே ஸ்காட்லாந்தில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாட்டு பருவநிலை மாநாட்டுக்கு முன்னதாக தனது கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான இலக்குகளைத் திட்டமிடுமாறு ஆஸ்திரேலியாவுக்கு நெருக்குதல் அதிகரித்து வருகிறது. தம் அரசாங்கம் இதன் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக திரு மோரிசன் தெரிவித்துள்ளா்.