சீனாவுக்கு அடுத்ததாக துபாயின் இரண்டாவது ஆகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இவ்வாண்டின் முற்பாதியில் துபாய்க்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்த மொத்த வர்த்தகத்தின் மதிப்பு 67.1 பில்லியன் திர்ஹம் என்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 26) வெளியிடப்பட்ட அதிகாரபூர்வத் தகவல் தெரிவிக்கிறது. இந்தியா உடனான வர்த்தகம் ஆண்டு அடிப்படையில் 74.5 விழுக்காடு அதிகரித்தது.
ஒப்புநோக்க, இவ்வாண்டின் முற்பாதியில் துபாய்க்கும் சீனாவுக்கும் இடையே மொத்த வர்த்தகம் ஆண்டு அடிப்படையில் 30.7 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
துபாய் அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில், இவ்வாண்டின் முதற்பாதியில் துபாய்க்கும் சீனாவுக்கும் இடையே மொத்த வர்த்தக மதிப்பு 86.7 பில்லியன் திர்ஹம்.
சீனா, இந்தியாவுக்கு அடுத்த நிலையில் அமெரிக்கா வருகிறது.


