தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் அதிக சுதந்திரம்: சிட்னி அதிகாரிகள்

சிட்னி: கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வல் திடீ­ரென அதி­க­ரித்­த­தால் முடக்­கப்­பட்­டுள்ள சிட்னி நகரை அடுத்த சில வாரங்­களில் கட்­டம் கட்­ட­மா­கத் திறக்க அதி­கா­ரி­கள் திட்­ட­மிட்­டுள்­ள­னர்.

அதன்­படி தடுப்­பூசி போட்­ட­வர் களுக்கு போடா­த­வர்­க­ளை­விட அதிக சுதந்­தி­ரம் வழங்­கப்­படும்.

சிட்­னியை தலை­ந­க­ர­மா­கக் கொண்ட அதிக மக்­கள் வசிக்­கும் நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தில் தீவிர நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­கள் அம­லில் இருக்­கின்­றன.

இந்­நி­லை­யில் அக்­டோ­பர் 11க்கும் டிசம்­பர் 1க்கும் இடையே தீவி­ரக்­கட்­டுப்­பா­டு­கள் படிப்­ப­டி­யாக அகற்­றப்­ப­ட­வி­ருக்­கின்­றன.

அதற்­குள் 70 முதல் 80 விழுக்­காட்­டி­ன­ருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டி­ருக்­கும் என எதிர்­பார்க்­கப் ­ப­டு­கிறது.

இருந்­தா­லும் சமூக விளை­யாட்டு, உண­வ­கத்­தில் உண்­பது, கடைத்­தொ­கு­தி­க­ளுக்­குச் செல்­வது போன்ற நட­வ­டிக்­கை­களில் பங்­கேற்க முழு­மை­யாக தடுப்­பூசி போடா­த­வர்­க­ளுக்கு அனு­ம­தி­யில்லை என்று அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர்.

"உல­கில் உள்ள பெரும்­பா­லான சம்­ப­வங்­க­ளைப்­போல இல்லை என்­ப­தைப் புரிந்­து­கொள்ள வேண்­டும். தடுப்­பூசி போடா­விட்­டால் மற்­ற­வர் களைப் போல நட­வ­டிக்­கை­களில் பங்­கேற்க முடி­யாது. குறைந்­தது நான்கு முதல் ஆறு வாரங்­க­ளுக்­குக் காத்­தி­ருக்க வேண்­டும்," என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில முதல்­வர் கிளா­டிஸ் பெர­ஜிக்­லி­யான் தொலைக்­காட்சி உரை­யில் தெரி­வித்­தார்.

"நீங்­கள் தடுப்­பூசி போட­வில்­லை­யென்­றால் நண்­பர்­க­ளு­டன் உண­வு சாப்­பிட முடி­யாது, வீட்­டிற்கு விருந்­தி­னர்­களை வர­வேற்க முடி­யாது," என்று மேலும் அவர் தெரி­வித்­தார்.

ஆனால் தடுப்­பூசி போடா­த­வர்­கள் எப்­படி நட­வ­டிக்­கை­களில் பங்­கேற்­பதை தடுக்க முடி­யும் என்­பதை அவர் விளக்­க­வில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!