கொவிட்-19 தொற்றால் மனிதர்களின் ஆயுட்காலம் குறைந்தது

லண்­டன்: உலக நாடு­களை முடக்­கி­வைத்­துள்ள கொவிட்-19 கொள்ளை நோயால் மனி­தர்­க­ளின் ஆயுட்­கா­லம் வெகு­வா­கக் குறைந்­து­விட்­டது.

இரண்­டாம் உல­கப்­போ­ருக்­குப்­பி­றகு மனி­தர்­க­ளின் ஆயுள்­கா­லத்­தில் மிகப்­பெ­ரிய சரிவு ஏற்­பட்­டி­ருப்­ப­தாக ஆகஸ்­ஃபர்ட் பல்­க­லைக் கழ­கத்­தின் ஆய்வு தெரி­விக்­கிறது.

குறிப்­பாக அமெ­ரிக்க ஆண் களின் ஆயுள் இரண்டு ஆண்டு களுக்கு மேல் குறைந்­து­விட்­டது.

ஐரோப்பா, அமெ­ரிக்கா, சிலி ஆகிய நாடு­கள் உட்­பட 29 நாடு­களில் ஆய்வு நடத்­தப்­பட்­டது.

கடந்த 2019ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் 22 நாடு­களில் ஆயுட்­கா­லம் ஆறு மாதங்­க­ளுக்கு மேல் குறைந்­துள்­ளது.

ஒட்­டு­மொத்த 29 நாடு­க­ளைக் கணக்­கில் எடுத்­துக்­கொண்­டால் 27 நாடு­களில் மனி­தர்­க­ளின் ஆயுள் குறைந்­து­விட்­டது.

பெரும்­பா­லான நாடு­களில் மனி­தர்­க­ளின் ஆயுட்­கா­லம் குறை வதற்­கும் கொவிட்-19 மர­ணங்­க­ளுக் கும் தொடர்பு இருப்­ப­தாக ஆய்வு கூறு­கிறது.

ராய்ட்­டர்ஸ் புள்ளி விவ­ரங்­க­ளின்­படி உல­கில் இது­வரை ஐந்து மில்­லி­யன் பேர் கொவிட்-19 தொற்­றுக்­குப் பலி­யா­கி­விட்­ட­னர்.

"கிரு­மித்­தொற்று ஏற்­டுத்­தி­யுள்ள பெரி­ய­தொரு தாக்­கத்தை ஆய்­வின் முடி­வு­கள் காட்­டு­கின்­றன. இது, பல நாடு­க­ளுக்கு அதிர்ச்­சி­ய­ளிக்­கும் வகை­யில் இருக்­கிறது," என்று ஆய்வுக் கட்­டு­ரை­யின் இணை ஆசி ரிய­ரான டாக்­டர் ரிதி காஷ்­யாப் தெரி­வித்­தார்.

ஆக்ஸ்­ஃபர்ட் பல்­க­லைக்­க­ழகத்­தின் ஆய்வுக் கட்­டுரை அனைத்­து­லக கொள்­ளை­நோய் சஞ்­சி­கை­யில் வெளி­யி­டப்­பட்­டது.

பல நாடு­களில் பெண்­க­ளை­விட ஆண்­க­ளின் வாழ்­நாள் குறைந்­து­விட்­டது. அமெ­ரிக்க ஆண்­கள் 2019ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் வாழ்­நா­ளில் 2.2 ஆண்­டு­களை இழந்து விட்­ட­னர்.

ஒட்­டு­மொத்­த­மாக 11 நாடு­களில் உள்ள பெண்­க­ளு­டன் ஒப்­பிட்­டால் 15 நாடு­களில் ஆண்­க­ளின் ஆயுட்­கா­லம் ஒரு வரு­டத்­திற்கு ேமல் குறைந்­துள்­ளது.

அமெ­ரிக்­கா­வில் வேலை செய்­யும் வய­தி­னர் மற்­றும் 60 வய­துக்­குக் கீழ் உள்­ள­வர்­க­ளி­டையே மரண எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. மாறாக, ஐரோப்­பா­வில் 60 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளி­டையே இறப்பு அதி­க­ரித்து காணப்­ப­டு­கிறது.

"மேலும் ஆய்­வு­கள் செய்­யப்­பட வேண்­டும். இதற்கு உலக நாடு களின் ஒத்­து­ழைப்பு தேவைப்­ப­டு­கிறது. குறைந்த, நடுத்­தர வரு­மா­னம் கொண்ட நாடு­கள் உட்­பட பல நாடு­கள் மர­ணங்­கள் தொடர்­பான தர­வு­களை வெளி­யிட வேண்­டும்," என்று திரு காஷ்­யாப் கேட்­டுக்­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!