ஜெர்மனி தேர்தலில் இழுபறி

பெர்­லின்: ஜெர்­ம­னி­யில் நடந்து முடிந்­துள்ள நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் வெற்றி பெற்­றுள்­ள­தாக எதிர்க்­கட்­சி­யான சமூக ஜன­நா­ய­கக் கட்சி அறி­வித்­துள்­ளது. பிர­த­மர் ஏஞ்­சலா மெர்­கல்­லின் ஆட்சி இனி இல்லை என்று அக்­கட்சியின் தலைவர் ஒலாஃப் ஷோல்ட்ஸ் கூறி­யுள்ளார்.

நாட்­டின் முதல் பெண் பிர­த­ம­ராக 2005ல் பொறுப்பு ஏற்ற ஏஞ்­சலா மெர்க்­கல் 16 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு பிர­த­மர் பத­வி­யி­லி­ருந்து வில­கு­வ­தா­க­வும் அர­சி­ய­லுக்கு முழுக்­குப் போடு­வ­தா­க­வும் அறி­வித்­தார். இந்­நி­லை­யில் இம்­மா­தம் 26ஆம் தேதி பொதுத்­தேர்­தல் நடை­பெற்­றது. இதில் சமூக ஜன­நா­யகக் கட்­சிக்கு 206 இடங்­களும் மத்­திய வல­து­சாரி கன்­சர்­வேட்­டிவ் கூட்­ட­ணிக்கு 196 இடங்­களும் கிடைத்­துள்­ளன. இரு கட்சிகளும் ஏறக் குறைய சமமான வெற்றியை பெற்று உள்ளதால் மற்ற கட்சிகள் ஆதரவு அளித்தால் மட்டுமே இவற்றில் ஒன்று ஆட்சியை அமைக்க முடியும்.

இந்த நிலை­யில் 118 இடங்­களில் வெற்றி பெற்று 3வது பெரிய கட்சி­ யாக கிரின்ஸ் கட்சி உரு­வெ­டுத்­துள்­ளது. ஒலாஃப் ஷோல்ட்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சிக்கு 25.7 விழுக்காடு வாக்கு களும் மத்திய வலதுசாரி கன்சர் வேட்டிவ் கூட்டணிக்கு 24.1 விழுக்காடு வாக்குகளும் கிரின்ஸ் கட்சிக்கு 14.8 விழுக்காடு வாக்கு களும் கிடைத்துள்ளன. கிரின்ஸ் கட்சியின் பெண் வேட்பாளரான அன்னலேனா பேர்பாக் யாருக்கு ஆதரவு அளிப்பார் என்பது ெபரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!