செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
053e8cf2-a190-4aaa-9340-4887c932fc4a
-

மலேசியாவில் 10,000 பேர் பாதிப்பு

கோலாலம்பூர்: மலேசியாவில் நேற்று ஒரு நாள் மட்டும் 10,959 கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் நேற்று 2,145 சம்பவங்கள் குறைந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

நியூசிலாந்தில் வீட்டில் தனிமை

வெலிங்டன்: நியூசிலாந்தில் அரசாங்கம் ஒதுக்கியுள்ள இடங்களில் தனிமைப்படுத்துவதற்குப் பதிலாக சிறிய எண்ணிக்கையில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எல்லைகளைத் திறக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை இடம்பெறுவதாக பிரதமர் ெஜசிந்தா ஆர்டர்ன் கூறியுள்ளார்.

மக்கள் மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்ப பல்வேறு வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் சொன்னார்.

பருவநிலை மாநாடு: ஆஸ்திரேலிய

பிரதமர் பங்கேற்கவில்லை

சிட்னி: கிளாஸ்கோவில் நடைபெறும் ஐநாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பருவநிலை மாநாட்டில் ஆஸ்திரேலியப் பிரதமர் பங்கேற்க மாட்டார் என ெதரிவிக்கப்பட்டுள்ளது.

2050க்குள் கரிம வெளியேற்றமே இல்லாமல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள ஆஸ்திரேலியப் பிரதமருக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. ஆனால் உலகின் ஆகப்பெரிய நிலக்கரி ஏற்றுமதியாளரான ஆஸ்திரேலியா, பருவநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான உறுதியான நடவடிக்கைகள் எதையும் இதுவரை அறிவிக்கவில்லை.

எரிபொருள் தட்டுப்பாடு

லண்டன்: பிரிட்டனில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வடக்கு லண்டன் பெட்ரோல் நிலையங்களில் வாகனமோட்டிகள் பெட்ரோலுக்காகவும் டீசலுக்காகவும் வரிசையில் நிற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.