சுவீடனில் வெடிப்புச் சம்பவம்; நால்வருக்கு மோசமான காயங்கள்

சுவீடனில் வெடிப்புச் சம்பவம்; நால்வருக்கு மோசமான காயங்கள்

2 mins read
c52fa26c-96a6-4a3b-b174-9525b6aa3943
வெடிப்பு நிகழ்ந்த கட்டடத்திலிருந்து குடியிருப்பாளர்களை மீட்புப் பணியாளர்கள் பத்திரமாக வெளியேற்றினர். வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.படம்: ராய்ட்டர்ஸ் -

ஸ்டோக்­ஹோல்ம்: சுவீ­ட­னின் கோதன்­பர்க் நக­ரில் உள்ள ஒரு கட்­ட­டத்­தில் வெடிப்பு ஏற்­பட்­டதை அடுத்து, நால்­வர் கடு­மை­யா­கக் காய­முற்­ற­னர்.

அவர்­களில் மூன்று பெண்­களும் ஓர் ஆட­வ­ரும் அடங்­கு­வர்.

இந்­தச் சம்­ப­வம் சுவீ­டன் நேரப்­படி நேற்று காலை நிகழ்ந்­தது.

குறைந்­தது 16 பேர் மருத்­து­வ­

ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

பாதிக்­கப்­பட்ட கட்­ட­டத்­தி­

லி­ருந்து நூற்­றுக்­க­ணக்­கான குடி­யி­ருப்­பா­ளர்­களை அதி­கா­ரி­கள் வெளி­யேற்­றி­னர். சம்­ப­வம் குறித்து அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்­து­கின்­ற­னர்.

வெடிப்பு வேண்­டு­மென்றே ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தாக இருக்­கக்­கூ­டும் என்று அதி­கா­ரி­கள் சந்­தே­கம் தெரி­வித்­துள்­ள­னர்.

வெடிப்­பின் கார­ண­மாக எந்த அள­வுக்­குப் பாதிப்பு, சேதம் ஏற்­பட்­டுள்­ளது என்று இன்­னும் தெளி­வா­கத் தெரி­ய­வில்லை.

வெடிப்­புக்­கான கார­ணமும் இன்­னும் தெரி­ய­வில்லை என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

கட்­ட­டத்­தில் உள்ள பல வீடு­களும் படிக்­கட்­டு­களும் சேத­ம­டைந்­துள்­ள­தாக அவர்­கள் கூறி­னர்.

தீயை இன்­னும் கட்­டுக்­குள் கொண்டு வர­வில்லை என்று சுவீ­ட­னின் அவ­ச­ர­கால மீட்பு அதி­கா­ரி­கள் நேற்று தெரி­வித்­த­னர்.

அதை அணைக்­கும் பணி­யில் தீய­ணைப்­புப் படை­யி­னர் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது. அதி­காலை 4.30 மணி அள­வில் வெடிப்­புச் சத்­தம் கேட்­டதை அடுத்து, தமது வீட்­டின் முன்­

மா­டத்­தி­லி­ருந்து வெளியே குதித்­த­தாக குடி­யி­ருப்­பா­ளர்­களில் ஒரு­வ­ரான திரு­வாட்டி ஜெசிக்கா கோட்­டஸ்­பர்க்-போஸ்­டன் தெரி­வித்­தார்.

வெடி­பொ­ருட்­கள் தவ­றான முறை­யில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வது தொடர்­பாக 2019ஆம் ஆண்­டில் சுவீ­ட­னில் 187 வழக்­கு­கள் பதி­வா­கின. அவற்­றில் பெரும்பாலானவை கையெறி குண்டு­கள், நாட்டு வெடி­குண்­டு­கள் ஆகி­ய­வற்­று­டன் தொடர்­பு­டை­யவை. குண்­டர் கும்­பல்­

க­ளுக்கு இடை­யி­லான மோதல்­களில் அவை பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.