பேங்காக்: தாய்லாந்தில் மிக மோசமான அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
வெள்ளம் காரணமாக 70,000 வீடுகள் சேதமடைந்துவிட்டதாவும் ஆறு பேர் மாண்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தலைநகர் பேங்காங்கில் வெள்ள அபாயத்தைத் தடுக்கும் பணிகளில் அந்நாட்டு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய கனமழையின் விளைவாக தாய்லாந்தின் 30
மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் மத்தியப் பகுதி ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து இயற்கைப் பேரிடர் தடுப்பு, மீட்புப் பணித் துறை கூறியது. பேங்காக்கில் உள்ள சாவ் பிராயா ஆற்றின் நீர் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள அணைகள் திறந்துவிடப்
படுவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேங்காக்கில் உள்ள முக்கிய சின்னங்கள், பாரம்பரியமிக்க கட்டடங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் அவற்றைச் சுற்றி ராணுவ வீரர்கள் தடுப்பு போட்டு வருகின்றனர்.
பேங்காக்கிற்கு 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பழைய தலைநகரமான அயுத்தயாவிலும்
வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
2011ஆம் ஆண்டில் பேங்காக்கில் ஏற்பட்ட வெள்ளம் பெருமளவிலான சேதத்தை விளைவித்தது.
அந்த நிலை மீண்டும் ஏற்படாதபடி தேவையான ஏற்பாடு
களைச் செய்ய முடியும் என தாய்லாந்து அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

