அவசரநிலையை முடிவுக்குக் கொண்டுவரும் ஜப்பான்

தோக்­கியோ: கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த விதிக்­கப்­பட்டுள்ள அவ­ச­ர­நி­லையை இம்­மா­தம் 30ஆம் தேதி­யன்று ஜப்­பான் முடி­வுக்­குக் கொண்டு வரு­கிறது.

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் குறைந்­தி­ருப்­ப­தா­லும் மருத்­து­வ­ம­னை­களில் ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டி­நிலை தணிந்திருப்ப தாலும் அவ­ச­ர­நிலை முடி­வுக்­குக் கொண்டு வரப்­ப­டு­வ­தாக அந்­நாட்­டின் பொரு­ளி­யல் அமைச்­சர் யசு­டோஷி நிஷி­முரா நேற்று கூறி­னார்.

அவ­ச­ர­நி­லையை முடி­வுக்­குக் கொண்­டு­வர ஜப்­பா­னிய அர­சாங்­கத்­தின் ஆலோ­ச­னைக் குழு அனு­மதி வழங்­கி­யுள்­ள­தாக அவர் தெரி­வித்­தார்.

கிட்­டத்­தட்ட ஆறு மாதங்­க­ளுக்­குப் பிறகு ஜப்­பா­னில் முதல்­மு­றை­யாக அவ­ச­ர­நிலை முடி­வுக்­குக் கொண்­டு­வ­ரப்­ப­டு­கிறது.

இருப்­பி­னும், உண­வ­கங்­க­ளுக்­கும் பலர் ஒன்­று­கூ­டும் நிகழ்­வு

­க­ளுக்­கும் விதிக்­கப்­பட்­டுள்ள சில கட்­டுப்­பா­டு­கள் இன்­னும் ஒரு மாதத்­துக்­குத் தொட­ரும் என்று அறி­விக்­கப்­பட்­டது.

"அவ­ச­ர­நிலை முடி­வுக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தும் புதி­தா­கப் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை நிச்­ச­யம் அதி­க­ரிக்­கும். நிலைமை கட்­டுக்­க­டங்­கா­மல் போவ­தைத் தடுக்க தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும்," என்­றார் திரு நிஷி­முரா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!