சோல்: வடகொரியா மீண்டும் ஏவுகணை பாய்ச்சியுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
கடலை நோக்கி அந்த குறுகிய தூர ஏவுகணை பாய்ச்சப்பட்டதாக தென்கொரிய ராணுவம் கூறியது.
தன்னுடைய சுய தற்காப்பு உரிமைகளை எவராலும் நிராகரிக்க முடியாது என்று ஐநாவுக்கான வடகொரியத் தூதர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
ஆயுதங்களைச் சோதனை செய்ய தனது நாட்டிற்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாக அவர் கூறினார்.
தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு வடகொரியா தெரிவித்திருந்தது.
ஆனால் அது மீண்டும் ஏவுகணை பாய்ச்சியிருப்பதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர். வட
கொரியா ஏவுகணை பாய்ச்சியதை அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது.