மலேசிய சிறைச்சாலைகளில் கொவிட்-19 பாதிப்பு

கோலா­லம்­பூர்: மலே­சிய சிறை­களில் கடந்த ஆண்­டி­லி­ருந்து 51,000க்கும் மேற்­பட்­டோ­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. இவர்­களில் சிறை­யில் பிறந்த ஒன்­பது குழந்­தை­கள், சிறைக் கைதி­கள், சிறை அதி­கா­ரி­கள் ஆகி­யோர் அடங்­கு­வர்.

இந்­தத் தக­வலை மலே­சிய உள்­துறை துணை அமைச்­சர் டாக்­டர் இஸ்­மா­யில் முகம்­மது நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார். மொத்­தம் 51,123 பேர் பாதிக்­கப்­பட்­ட­தாக அவர் கூறி­னார்.

சிறைக் கைதி­கள், சிறை அதி­கா­ரி­கள் ஆகி­யோ­ரின் குடும்­பத்­தி­ன­ருக்­கும் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

சிறைக் கைதி­கள் அனை­வ­ருக்­கும் கொவிட்-19 தடுப்­பூசி போட மலே­சிய அர­சாங்­கம் திட்­ட­மிட்­டுள்­ள­தாக எதிர்க்­கட்சி நாடாளு­மன்ற உறுப்­பி­னர் திரு ஆர்­எஸ்­என். ராயர் கேள்வி கேட்­டதை அடுத்து, இந்­தத் தக­வல்­களை துணை அமைச்­சர் வெளி­யிட்­டார்.

சிறைக் கைதி­கள் பல­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தால் பல வழக்­கு­கள் ஒத்­தி­வைக்­கப்­பட்­டி­ருப்­பதை திரு ராயர் சுட்­டி­னார். எனவே, கைதி­கள் அனை­

வ­ருக்­கும் தடுப்­பூசி போடு­வது முக்­கி­யம் என அவர் வலி­யு­றுத்­தி­னார்.

சிறைக் கைதி­கள், சிறை அதி­கா­ரி­கள் அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி போடப்­படும் என்று டாக்­டர் இஸ்­மா­யில் உறுதி அளித்­தார்.

மலே­சிய சிறைச்­சா­லை­க­ளின் கொள்­ள­ள­வை­விட அதி­க­மான கைதி­கள் அடைக்­கப்­பட்­டுள்­ளதை ஆக அண்­மைய புள்­ளி­வி­வ­ரங்­கள் காட்­டு­வ­தாக டாக்­டர் இஸ்­மா­யில் தெரி­வித்­தார்.

தற்­போது புதிய கைதி­கள் பிர­தான சிறை­களில் அடைக்­கப்­படாமல் மற்ற இடங்­களில் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதாக அவர் கூறி­னார். கூடிய விரைவில் இந்த விவகாரத்துக்குத் தீர்வு காணப்படும் என்றார்் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!