அடுப்பிலும் தீ, முடியிலும் தீ! அடியாத்'தீ'!

அடுப்பிலும் தீ, முடியிலும் தீ! அடியாத்'தீ'!

1 mins read
37ae634b-7818-4309-bb47-061a1b1ad63f
டுவிட்டர் காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம். -

எதிர்பாராது நிகழ்ந்த ஒரு தீ விபத்து சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.

சமையல் வேலையில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவர், அடுப்பிற்குக் கீழே உள்ள அலமாரியில் எதையோ எடுக்கும்போது தலையில் தீப்பற்றிவிடுகிறது.

அதை அறியாமல் அவர் தொடர்ந்து வேலையில் மூழ்கியிருக்கிறார்.

40 நொடிகள் கழித்தே தமக்கு நேர்ந்த கொடூரத்தை அறியும் அவர், உடனடியாகத் தமது கைகளாலேயே தலையைத் தட்டிவிட்டு, நெருப்பை அணைக்கிறார்.

இக்காணொளி இணையவாசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 'நெருப்புப் பெண்மணி' என்ற வரியுடன் இந்தக் காணொளியைப் பதிவேற்றம் செய்துள்ளார் டுவிட்டர்வாசி ஒருவர்.

சம்பவம் இம்மாதம் 16ஆம் தேதி நிகழ்ந்ததாகத் தெரிகிறது. எங்கு நிகழ்ந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்