மலேசியா: 18 வயதுக்குக் குறைந்த 400,000 பேருக்கு கொவிட்-19

மலேசியா: 18 வயதுக்குக் குறைந்த 400,000 பேருக்கு கொவிட்-19

2 mins read
aeafa580-4725-4767-ab60-2d5b8714116d
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட 18 வய­துக்­கும் குறை­வா­ன­வர்களின் எண்­ணிக்கை, இவ்­வாண்டு 400,000க்கு மேல் ஆகி­விட்­ட­தாக சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் நேற்று தெரி­வித்­தார்.

இந்த எண்­ணிக்கை கடந்த ஆண்­டில் கிட்­டத்­தட்ட 12,000 ஆக இருந்­தது. இவ்­வாண்­டில் இது­வரை 18 வய­துக்­கும் குறை­வா­ன­வ­ரி­டையே பதி­வான கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­களில் 252,569 பள்ளி மாண­வர்­களும் 42,831 பாலர் பள்ளி மாண­வர்­களும் அடங்­கு­வர். பாதிக்­கப்­பட்ட இப்­பி­ரி­வி­ன­ரில் 67 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர் என்று திரு கைரி குறிப்­பிட்­டார்.

"கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ராக பிள்­ளை­க­ளுக்­குப் பாது­காப்பு அளிப்­பது நம் அனை­வ­ரது பொறுப்­பா­கும். தேவை­யான முன்­னெச்­ச­ரிக்கை, பாது­காப்பு நட­வடிக்­கை­களை நடை­மு­றைப்­படுத்தி அவர்­க­ளுக்­காக பாது­காப்­பான ஒரு சூழலை உரு­வாக்­கித் தரு­வதை நாம் உறு­தி­செய்­திட வேண்­டும்," என்று நேற்று நடை­பெற்ற இணை­யக் கருத்­த­ரங்கு ஒன்­றில் அவர் கூறி­னார்.

அர­சாங்­கம் நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்ள தடுப்­பூ­சித் திட்­டம் ஒன்­றின் வழி, 12 வய­துக்­கும் 17 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­க­ளுக்­குப் பாது­காப்பு கிடைக்­கும் என்று திரு கைரி குறிப்­பிட்­டார்.

இக்­கு­றிப்­பிட்ட பிரி­வி­ன­ரில் குறைந்­தது 43 விழுக்­காட்­டி­ன­ருக்கு கொவிட்-19க்கு எதி­ரான முதல் தடுப்­பூசி போடப்­பட்­டு­விட்­டது என்று அவர் தெரி­வித்­தார்.

இருப்­பி­னும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது மட்­டும் போதாது என்­றும் மக்­கள் தொடர்ந்து தொற்­றைத் தவிர்க்­கக்­கூ­டிய புதிய வழக்­க­நிலை நட­வ­டிக்­கை­க­ளைக் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­னார். இதற்கு பெற்­றோ­ரும் பங்­க­ளிக்க வேண்­டும் என்­றார்.

"சுகா­தா­ரம் என்ற அம்­சம், அனைத்து தரப்­பி­ன­ரின் ஒத்­துழைப்பை நம்­பி­யுள்­ளது. அதி­லும் கொவிட்-19 தொற்று என்ற நிலை­யில் பார்க்­கும்­போது, அனை­வருக்­கும் பாது­காப்பு உறு­தி­யா­கும்­வரை யார் ஒரு­வ­ருக்­கும் பாது­காப்பு உறுதி இல்லை," என்­றார் அமைச்­சர் கைரி.