வில்னியஸ்(லித்துவேனியா): லித்துவேனியாவில் ஓர் ஆடவரின் வயிற்றிலிருந்து ஒரு கிலாகிராமுக்கும் அதிகமான எடை கொண்ட ஆணிகளையும் திருகாணிகளையும் அகற்றியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மது அருந்தும் பழக்கத்தைக் கைவிட்ட பிறகு அவர் உலோகப் பொருட்களை முழுங்கியதாகச் சொல்லப்படுகிறது.
ஆடவரின் அடையாளக் குறிப்புகளை வெளியிட உத்தரவில்லாததால் அவரின் பெயர் தெரிவிக்கப்படவில்லை.
மோசமான வயிற்று வலி ஏற்பட்டாதல் சிகிச்சைக்காக அவர் கிளைப்பேடா நகரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
'எக்ஸ்-ரே' சோதனை செய்து பார்த்தபோது ஆடவரின் வயிற்றில் உலோகப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றில் சிலவற்றிள் நீளம் சுமார் 10 சென்டிமீட்டர். மூன்று மணிநேரம் நீடித்த அறுவை சிகிச்சையில் அனைத்து உலோகப் பொருட்களும் அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.


