எல்லா நாட்டவரும் புக்கெட் செல்லலாம்

எல்லா நாட்டவரும் புக்கெட் செல்லலாம்

1 mins read
ada76ac4-06a6-4c91-b351-03f565eb129b
தாய்லாந்தின் புக்கெட் தீவில் இருக்கும் கேப் சிங் கடற்கரை. இப்படம் சென்ற மாதம் 21ஆம் தேதியன்று எடுக்கப்பட்டது. புக்கெட்டைப் போல் தனிமைப்படுத்தும் தேவையின்றி பயணம் மேற்கொள்ளும் முயற்சிகளை தென்கிழக்காசிய நாடுகள் எடுக்கின்றன. படம்: ஏஎஃப்பி -

பேங்­காக்: தனி­மைப்­ப­டுத்­தும் தேவை­யின்றி தாய்­லாந்­தின் புக்­கெட் தீவுக்­குச் செல்ல வகை­செய்யும் 'சேண்ட்­பாக்ஸ்' திட்­டம் இப்­போது எல்லா நாடு­க­ளைச் சேர்ந்த பய­ணி­க­ளுக்­கும் திறந்­து­வி­டப்­பட்டுள்­ளது. கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்ள எல்லா பய­ணி­க­ளுக்­கும் இது பொருந்­தும். இதற்கு முன் திட்டம் கிருமிப் பரவல் அதிகம் இல்லாத நாடுகளுக்கு மட்டுமே திறந்துவிடப்பட்டது.

தென்­கி­ழக்­கா­சி­யா­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வந்­த­போ­தும் கடந்த ஜூலை மாதத்­தில் தாய்­லாந்து புக்­கெட்­டுக்­கான இத்­திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

இம்முயற்சி, இப்­போது வெற்­றி­கண்­டுள்­ளது. கடந்த புதன்­கி­ழமை நில­வ­ரப்­படி புக்­கெட்­டிற்கு 38,289 பேர் பய­ணம் மேற்­கொண்­டுள்­ள­னர். அவர்­களில் 0.3 விழுக்­காட்­டி­ன­ருக்கு மட்­டுமே கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.

கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்­க­ளுக்கு இடைப்­பட்ட காலத்­தில் மட்­டும் இத்­திட்­டம் 1.63 பில்­லி­யன் பாட் தொகையை ஈட்­டி­யது.

இயல்­பு­நி­லை­யில் இதை­விட அதி­க­மான சுற்­றுப்­ப­ய­ணி­க­ளை­யும் வருவாயையும் புக்கெட் பெற்றது. ஆனால் தற்­போ­தைய சூழ­லைக் கருத்­தில்­கொள்­ளும்­போது முடங்­கிக் கிடக்­கும் சுற்­றுப்­ப­ய­ணத் துறைக்கு புக்­கெட்­டின் முயற்சி உயி­ரூட்­டு­கிறது.

விய்­ட­நா­மில் உள்ள ஃபு குவோக் தீவும் இவ்­வாறு செய்­யும் எண்­ணம் கொண்­டுள்­ளது. இந்­தோ­னீ­சி­யா­வின் பாலி தீவும் இந்த முயற்­சி­யில் கள­மி­றங்­கத் திட்­ட­மிட்­டுள்­ளது.

மலே­சி­யா­வின் லங்­காவி தீவு, சென்ற மாதம் 16ஆம் தேதி­யன்று தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட உள்­ளூர் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளுக்­குத் திறந்து­வி­டப்­பட்­டது.