பதவி விலகும் டுட்டர்டே

1 mins read
ecd07fd3-0e6d-4411-8868-eb48446bd26a
-

மணிலா: தனது தவ­ணைக் காலம் முடிந்­த­வு­டன் அர­சி­ய­லி­லி­ருந்து வில­கிக்கொள்ளப் போவதாக பிலிப்­பீன்ஸ் அதி­பர் ரோட்­ரிகோ டுட்­டர்டே அறி­வித்­துள்­ளார். நீண்ட­கா­ல­மா­கத் தனக்கு உத­வி­யா­ள­ராக இருந்த செனட்­டர் பொங் கோ துணை அதி­பர் தேர்­ததலில் வெல்­வ­தற்கு வகை­செய்ய அதி­லி­ருந்து வில­கிக்­கொள்­வதாகத் திரு டுட்­டர்டே கூறி­னார்.

துணை அதி­ப­ரா­வ­தற்­குத் தனக்­குத் தகு­தி­யில்லை எனப் பெரும்­பா­லான பிலிப்­பீன்ஸ் மக்­கள் நம்­பு­வ­தா­க­வும், அதை­யும் தாண்டி போட்­டி­யிட்­டால் அது அர­சி­யல் விதி­முறை சட்­டத்தை மீறு­வ­தா­கும் என்று அவர் கூறி­னார்.

அடுத்த ஆண்டு துணை அதி­பர் தேர்­த­லில் திரு டுட்­டர்டே போட்­டி­யி­டு­வ­தைப் பெரும்­பா­லான பிலிப்­பீன்ஸ் மக்­கள் விரும்­ப­வில்லை என்று அண்­மை­யில் நடத்­தப்­பட்ட கருத்­துக்­க­ணிப்பு தெரி­வித்­தது.

திரு கோ, திரு டுட்­டர்­டே­யின் சொந்த நக­ரான டவா­வில் பணக்­கார குடும்­பத்­தில் பிறந்­த­வர். அவர் 1989ஆம் ஆண்­டி­லி­ருந்து திரு டுட்­டர்­டே­யின் நிர்­வாக உதவி­யா­ள­ராக இருந்து வந்­துள்­ளார்.

திரு டுட்­டர்­டே­யின் மகளும் டவாவ் நகர மேய­ரு­மான சாரா டுட்­டர்டே-கார்ப்­பியோ அதி­பர் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வார் எனக் கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.