தனிமை உத்தரவு இல்லாத பயணங்களுக்கு எல்லைகளைத் திறந்துவிடும் பிரிட்டன்

தனிமை உத்தரவு இல்லாத பயணங்களுக்கு எல்லைகளைத் திறந்துவிடும் பிரிட்டன்

1 mins read
5cfdb1bb-d749-4852-9bb2-650fdb4f23e7
படம்: ஏஎஃப்பி -
Google News Preferred Icon

வெளிநாட்டுப் பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதிப்பதன் தொடர்பில் கூடுதலான நாடுகளுக்கு பிரிட்டன் தனது எல்லையை இந்த வார பிற்பகுதியில் திறந்துவிடுவது பற்றி பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளதாக தி சண்டே டெலிகிராஃப் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா, பிரேசில், மெக்சிகோ, இந்தோனீசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் 10 நாள்களுக்கு ஹோட்டலில் தங்க வேண்டியதில்லை. அக்டோபர் பிற்பகுதியில் இந்த நடைமுறை நடப்புக்கு வரும்.

வரும் வியாழக்கிழமை இந்த மாற்றங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் பிரிட்டனுக்குச் செல்வதற்கான விமானப் பயண முன்பதிவுகள் அதிகரிக்கக்கூடும்.