வாஷிங்டன்: அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானவர்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெக்சஸ் மாநிலத்தில் கருக்கலைப்பை கடுமையாகக் கட்டுப்படுத்தும் புதிய சட்டத்திற்கு எதிராக அந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
வாஷிங்டனில் ஆர்ப்பாட்டக் காரர்கள் 'கருக்கலைப்பை சட்டபூர்வமாக்க வேண்டும்' என்ற வாசகங்களை ஏந்தி உச்ச நீதிமன்ற கட்டடத்தை நோக்கி நடந்தனர்.
பேரணி தொடங்கும்போது சிலர் அவர்களுக்கு எதிராக போட்டி ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
இதனால் பேரணியில் குழப்பம் ஏற்பட்டது.
'அப்பாவி குழந்தைகளின் ரத்தம் உங்கள் கைகளில் படியும்' என்று போட்டி ஆர்ப்பாட்டக்காரர்களில் ஓர் ஆண் முழக்கமிட்டார்.
ஆனால் பெண்கள் ஒன்று சேர்ந்து கைதட்டி ஆடிப்பாடி ஆர்ப்பாட்டம் செய்ததால் அவரது குரல் எடுபடவில்லை.
பேரணியில் கலந்துகொண்ட ஒரு பெண், பெண்களுக்கு தங்களுடைய வாய்ப்பை தேர்ந்தெடுக்க முழு உரிமையுண்டு என்று கூறினார்.

