தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலக செல்வந்தர், தலைவர்கள் ரகசிய சொத்து அம்பலம்

2 mins read
15d1eb47-302f-4d4c-8078-23ba068af3dd
-

வாஷிங்டன்: சட்­ட­வி­ரோ­த­மா­க­வும் ரக­சி­ய­மா­க­வும் வரி ஏய்ப்பு செய்­தும் வெளி­நா­டு­களில் சொத்­து­க­ளைப் பதுக்­கிய உல­கச் செல்­வந்­தர்­கள், அர­சி­யல் தலை­வர்­கள் உள்­ளிட்­ட­வர்­க­ளின் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

அதில் 300க்கும் அதி­க­மான இந்­தி­யர்­கள் வெளி­நா­டு­களில் சொத்­து­க­ளைப் பதுக்­கிச் சேர்த்­த­தா­கப் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­னர். குறிப்­பாக அனில் அம்­பானி, சச்­சின் டெண்­டுல்­கர், நடி­கர் ஜாக்கி ஷிராஃப் உள்­ளிட்ட 60க்கும் மேற்­பட்­ட­வர்­கள் பிர­ப­ல­மா­ன­வர்­கள் என்று இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ் செய்­தித்­தாள் நேற்று கூறி­யது.

இவர்­களில் திவா­லா­கி­விட்­ட­தா­கக் கூறி­யுள்ள அனில் அம்­பானி சுமார் 1.3 பில்­லி­யன் டாலர் மதிப்­புள்ள சொத்­து­களை வெளி­நா­டு ­களில் 18 வெளி­நாட்டு நிறு­வ­னங்­களில் பதுக்கி வைத்­துள்­ள­தாக அது தெரி­வித்­தது.

செல்­வந்­தர்­க­ளின் ரக­சிய சொத்து­களை அம்­ப­லப்­ப­டுத்­தும் இந்த சுமார் 11.9 மில்­லி­யன் ஆவ­ணங்­கள் பேண்­டோரா பேப்­பர்ஸ் என்று அழைக்­கப்­ப­டு­கின்­றன.

அதில் உல­கின் 115 செய்தி நிறு­வ­னங்­க­ளைச் சேர்ந்த 600 செய்தி­யா­ளர்­கள் ஓராண்­டா­கப் புல­னாய்வு செய்து வெளி­யிட்­டுள்­ள­னர். இந்த ஆவ­ணங்­க­ளைப் புல­னாய்­வுச் செய்­தி­யா­ளர்­க­ளின் அனைத்­து­ல­கக் கூட்­ட­மைப்பு எனும் அமைப்பு பெற்­றது. இந்த ஆவ­ணங்­களில் முன்­னாள், இந்­நாள் தேசி­யத் தலை­வர்­கள் 35 பேருக்­கும் 91 நாடு­க­ளை­யும் பிர­தே­சங்­க­ளை­யும் சேர்ந்த 330க்கும் மேற்­பட்ட அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கும் அர­சாங்க அதி­கா­ரி­க­ளுக்­கும் தொடர்பு இ­ருப்­ப­தாக கூட்­ட­மைப்பு கூறி­யது.

பனாமா, துபாய், மொனோக்கோ, சுவிட்­சர்­லாந்து, கேய்­மன் தீவு­கள், அமெ­ரிக்­கா­வின் சவுத் டக்­கோட்டா மாநி­லம் போன்ற வரி செலுத்­தத் தேவை­யில்­லாத இடங்­களில் இவர்­கள் ரக­சி­ய­மாக போலி நிறு­வ­னங்­களை அமைத்து சொத்­து­களை வாங்­கிக் குவித்­த­தா­கக் கூறப்­பட்­டது. இந்த வட்­டா­ரத்­தில் குறிப்­பாக இந்­தோ­னீ­சிய பொரு­ளி­யல் ஒருங்­கி­ணைப்பு அமைச்­சர் ஆயர்­லங்கா ஹார்ட்­டோடோ, கடல் துறை, முத­லீட்­டுக்­கான அமைச்­ச­ர் லுஹுட் பாண்ட்­ஜய்­தான் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்ளது.

பாகிஸ்­தான் பிர­த­மர் இம்­ரான் கான், மலே­சி­யா­விள் முன்­னாள் நிதி அமைச்­சர் டயிம் ஸைனு­தீன் ஆகி­யோ­ரின் குடும்­பத்­தி­னர் ரக­சிய சொத்­து­க­ளைச் சேர்த்­த­தா­கவும் தெரிவிக்கப்பட்டது.

ஜோர்­தான் மன்­னர், அஸர்­பை­ஜான், கென்யா, செக் குடி­ய­ரசு உள்­ளிட்ட நாட்­டுத் தலை­வர்­கள் பல நூறு மில்­லி­யன் டாலர் சேர்த்து வைத்­த­தாக அதில் கூறப்­பட் ­டது. அதிபர் புட்டின் உதவியாளர் கள் இதில் சிக்கியுள்ளனர்.