கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தும் நியூசிலாந்து

கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தும் நியூசிலாந்து

1 mins read
6d9b485a-8f9d-46a8-bd03-9e48c8a0d602
படம்: ஏஎஃப்பி -

அடுத்த மாதத்திலிருந்து பெரிய நிகழ்ச்சிகளில் கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழ்களைத் தான் பயன்படுத்த இருப்பதாக நியூசிலாந்து செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 5) கூறியுள்ளது.

டெல்டா வகை கொரோனா கிருமியை எதிர்த்து அந்நாடு தற்போது போராடி வருகிறது. டெல்டா வகை கிருமிப் பரவல் காரணமாக, கொவிட்-19 கிருமியை ஒழிப்பதற்கான முயற்சி கைவிடப்படுவதாக நியூசிலாந்துப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் திங்கட்கிழமை கூறியிருந்தார்.

இந்நிலையில், பெரிய நிகழ்ச்சிகளில் கிருமிப் பரவல் கட்டுக்கடங்காமல் செலவதைத் தவிர்க்க தடுப்பூசிச் சான்றிதழ்கள் உதவும் என்றார் அவர்.

எனினும், சுகாதாரப் பராமரிப்புக் கழகங்கள், பேரங்காடிகள் போன்ற இடங்களில் தடுப்பூசிச் சான்றிதழ்களைப் பயன்படுத்துவதற்கான தேவையிராது என்றும் திருமதி ஆர்டர்ன் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்