அடுத்த ஆறு மாதங்களில் விமானத்தில் பயணம் செய்ய 63% இந்தியர்கள் விருப்பம்

அடுத்த ஆறு மாதங்களில் விமானத்தில் பயணம் செய்ய 63% இந்தியர்கள் விருப்பம்

1 mins read
39197c5d-7a71-4a0f-99b7-8307a1b3a5a5
படம்: ராய்ட்டர்ஸ் -

அடுத்த ஆறு மாதங்களில் விமானத்தில் பயணம் செய்ய 63 விழுக்காடு இந்தியர்கள் விரும்புவதாக அண்மைய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழல் தங்களுடைய வெளிநாட்டுப் பயண பழக்கவழக்கங்களை மாற்றிவிட்டதாக ஆசிய பசிபிக் விமானப் பயணிகளில் 91 விழுக்காட்டினர் கூறினர். எனினும், ஆண்டிறுதிக்குள் விமானப் பயணம் மேற்கொள்வது குறித்து பாதிப் பேர் நம்பிக்கையுடன் உள்ளனர். அடுத்த மாதம் விமானத்தில் பயணம் செய்ய 20 விழுக்காட்டினர் விரும்புகின்றனர்.

விமானப் பயணத்தைப் பொறுத்தமட்டில், பிரிட்டன் (25%), ஆஸ்திரேலியா (33%) ஆகிய நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களைவிட இந்தியர்கள் (78%) கூடுதல் கவனத்துடன் இருப்பதாக 'Passenger Confidence' எனும் அந்த ஆய்வு கண்டறிந்தது.

குறிப்புச் சொற்கள்