முடக்கநிலையிலிருந்து சிட்னி விடுபடுகிறது

2 mins read
3c63e28f-065f-4b83-8c4c-cb134cfcc013
சிட்னியில் ஆர்வமுடன் மீன்பிடிக்கும் ஆஸ்திரேலியர்கள். இந்நகரத்தில் தற்போது அமலில் உள்ள முடக்கநிலை வரும் திங்கள்கிழமை விலக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

சிட்னி: வரும் திங்­கட்­கி­ழமை சிட்னி முடக்க நிலை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­ப­டு­கிறது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் ஆகப் ெபரிய நக­ர­மான அது, நான்கு மாதங்­க­ளாக முடக்­கப்­பட்­டுள்­ளது.

அடுத்த சில நாட்­களில் எழு­பது விழுக்­காட்­டி­ன­ருக்­குத் தடுப்­பூசி போடும் இலக்கு நிறை­வே­றும். அதன் பிறகு சிட்­னியை தலை­ந­கர மாகக் கொண்ட நியூ சவுத் வேல்ஸ் மாநில மக்­கள் சுதந்­தி­ர­மாக நட­மாடலாம்.

மது­பா­னக் கூடங்­கள், சில்­லறைக் ­க­டை­கள், திரை­ய­ரங்­கு­கள், உடற்­ப­யிற்­சிக் கூடங்­கள் உள்­ளிட்­டவை கடு­மை­யான தனி­ந­பர் இடை­வெளி கட்­டுப்­பாட்­டு­டன் திறக்­கப்­படும்.

தடுப்­பூசி போட்­ட­வர்­க­ளாக இருந்­தால் பத்து பேர் வரை வீட்­டில் ஒன்­று­கூட அனு­ம­திக்­கப்­படும்.

திரு­மண விருந்து, இறு­திச் சடங்கு போன்­ற­வற்­றுக்­கான வரம்பு அதி­க­ரிக்­கப்­ப­டு­கிறது. தடுப்­பூசி போட்­ட­வர்­கள் 100 பேர் வரை அதில் பங்­கேற்­க­லாம்.

எண்­பது விழுக்­காட்­டி­ன­ருக்­குத் தடுப்­பூசி போட்­ட­தும் தடுப்­பூசி போட்­ட­வர்­கள் மட்­டும் இரவு நேர கேளிக்கை விடு­தி­கள் செல்ல அனு மதிக்­கப்­படும்.

முன்பு திட்­ட­மிட்­ட­ப­டியே அலு­வ­ல­கங்­களில் முகக்­க­வ­சம் கட்­டாய மாக்­கப்­ப­டாது.

ஆனால் தடுப்­பூசி போடா­த­வர்­கள் டிசம்­பர் 1ஆம் தேதி வரை கட்­டா­ய­மாக வீட்­டில் தங்­கி­யி­ருக்க வேண்­டும். தடுப்­பூசி பாஸ்­போர்ட்டை பயன்­ப­டுத்தி அவர்­கள் வீட்­டில் தங்­கி­யி­ருப்­பதை மாநில அரசு உறுதி செய்­ய­வி­ருக்­கிறது.

"நமது சுதந்­தி­ரத்­துக்கு தடுப்­பூசி போட்­டுக்கொள்­வது மிக முக்­கி­யம். தியா­கம் செய்­த­வர்­களுக்கும் அரும்­பா­டு­பட்­ட­வர்­க­ளுக்­கும் முடிந்த வரை பாது­காப்­பா­க­வும் கூடிய விரை­வி­லும் திறக்க உறுதி பூண்­டுள்­ளோம்," என்று நேற்று சிட்­னி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய மாநில முதல்­வர் டோமி­னிக் பெரோ­டெட் தெரி­வித்­தார்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் ஆகப் பெரிய நக­ரங்­க­ளான சிட்னி, மெல் பர்ன் தவிர தலை­ந­கர் கேன்­ப­ரா­வில் டெல்டா கிருமி பர­வி­ய­தால் கடந்த பல வாரங்­க­ளாக அது முடக்கி வைக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் இரண்டு டிரில்­லி­யன் டாலர் பொரு­ளி­யல் மந்தநிலைக்­குத் தள்­ளப்­பட்­டு உள்ளது.

அந்­ந­க­ரங்­களில் உள்ள அதி காரி­கள் கிரு­மித்­தொற்றை முடிவு கட்ட தொடர்ந்து முயற்­சி­களை எடுத்து வரு­கின்­ற­னர்.

அதன் அடுத்த கட்டமாக கட்டுப் பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட விருக்கின்றன.