டான்சானியா எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபெல் பரிசு

1 mins read
8171bcd0-67e0-4659-b969-1b009d5f0671
எழுத்தாளர் அப்துல்ரசாக் குர்னாவும் அவரது சில நூல்களும். படம்: ஏஎஃப்பி, ராய்ட்டர்ஸ் -

ஸ்டாக்­ஹோம்: இவ்­வாண்டு இலக்­கி­யத்­துக்­கான நோபெல் பரிசு, நாவ­லா­சி­ரி­யர் அப்­துல்­ர­சாக் குர்­னா­வுக்கு வழங்­கப்­ப­டு­கிறது.

'பாரடைஸ்', 'டிசர்ஷன்' உள்ளிட்ட பல நாவல்களை அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

அவரது நூல்கள், பொதுவாக அக­தி­கள் மற்றும் காலனி ஆதிக்­கம் தொடர்பில் இருக்கும்.

வளைகுடா நாடுகளில் உள்ள அகதிகள் குறித்து அண்மையில் அவர் எழுதிய நூலுக்கு தற்போது நோபெல் பரிசு கிடைத்துள்ளது.

திரு அப்­துல் ரசாக், டான்­சா­னியா நாட்­டைச் சேர்ந்­த­வர். 1960களில் அக­தி­யாக அவர் இங்­கி­லாந்­தில் குடி­யே­றி­னார்.

சுமார் பத்து மில்லியன் சுவீடன் கிரவுன்ஸ் (S$1.55 மில்லியன்) பரிசுத் தொகையாக அவருக்கு வழங்கப் படுகிறது.