கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் அக்டோபர் 13 முதல் உணவங்காடி நிலையங்களில் உணவருந்தவோ கடைத்தொகுதிகளுக்குச் செல்லவோ முடியாது

கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் அக்டோபர் 13 முதல் உணவங்காடி நிலையங்களில் உணவருந்தவோ கடைத்தொகுதிகளுக்குச் செல்லவோ முடியாது

1 mins read
444c2b47-1919-4b35-b3e0-29b82c7e6c6f
ஜூலை 12ஆம் தேதி எடுக்கப்பட்ட படத்தில் தேக்கா நிலையம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் வரும் புதன்கிழமை (அக்டோபர் 13) முதல் உணவங்காடி நிலையங்கள் மற்றும் காப்பிக்கடைகளில் அமர்ந்து உணவு, பானம் அருந்தவோ கடைத்தொகுதிகள் அல்லது சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவோ அனுமதி அளிக்கப்படாது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோரைப் பாதுகாக்கவும் சுகாதாரப் பராமரிப்பு முறையில் பளுவைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு இன்று சனிக்கிழமை (அக்டோபர் 9) தெரிவித்தது.

தற்போது, தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உணவங்காடி நிலையங்கள் மற்றும் காப்பிக்கடைகளில் அமர்ந்து உணவருந்த முடியும். அக்டோபர் 13 முதல் அவர்கள் உணவை வாங்கி எடுத்துச் செல்ல மட்டுமே முடியும்.

குறிப்புச் சொற்கள்