ஜோகூர் மன்னரை நெகிழ வைத்த எட்டு வயதுச் சிறுவன்

ஜோகூர் மன்னரை நெகிழ வைத்த எட்டு வயதுச் சிறுவன்

1 mins read
1007a3fe-dfba-4904-86ed-98ff6fbdb9ea
-

எட்டு வயதில் நூல் எழுதி அதன் விற்பனை மூலம் கிடைத்த 7,000 ரிங்கிட்டை (2,271 சிங்கப்பூர் வெள்ளி) ஜோகூர் சுல்தானின் அறநிறுவனத்துக்கு வழங்கியதன் மூலம் அந்நிறுவனத்துக்கு நன்கொடை வழங்கிய ஆக இளையவர் என்ற சிறப்பை கிரிஷ் ஹரன் நாயர் பெற்றுள்ளார்.

கிரிஷ் ஹரனின் செயலால் மகிழ்ந்த ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் "சிறுவனின் இந்த உன்னதச் செயல் பலரை ஊக்கவிக்க சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும்," என்று பாராட்டியுள்ளார்.

பள்ளிப் பாடத்துக்காக எழுதிய 'ஏ மைஸ்டிரயஸ் வோர்' என்ற சிறுகதையை இணைய நூலாகவும் அச்சுப் பிரதியாகவும் வெளியிட்டு இந்தத் தொகையைத் திரட்டியதாக கிரிஷ் ஹரன் கூறியுள்ளார்.

மேலும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ தமது முயற்சிகளைத் தொடரப்போவதாக கிரிஷ் ஹரன் தெரிவித்தார்.