எல்லைத் திறப்பில் மும்முரம் காட்டும் நியூ சவுத் வேல்ஸ்

எல்லைத் திறப்பில் மும்முரம் காட்டும் நியூ சவுத் வேல்ஸ்

2 mins read
a7166213-76f3-4e74-b2b7-a204f9b714fa
எல்லைகளை மீண்டும் திறந்து, அனைத்துலகப் பயணங்களுக்குத் தயாராகும் நியூ சவுத் வேல்ஸ். படம்: இபிஏ -

சிட்னி: அனைத்­து­ல­கப் பய­ணங்­

க­ளைக் கூடிய விரை­வில் மீண்­டும் தொடர்­வது குறித்து நியூ சவுத் வேல்ஸ் மாநில அர­சு­டன் கலந்­து­ரை­யாடி வரு­வ­தாக ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் தெரி­வித்துள்ளார்.

"இல்­லத் தனிமை அணு­கு­

மு­றையை அடுத்த மாதம் விரை­வு­ ப­டுத்­து­வது தொடர்­பாக நியூ சவுத் வேல்ஸ் அர­சாங்­கம் ஆராய்ந்து வரு­கிறது. திட்­டம் நிறை­வே­றி­னால் நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தில் அனைத்­து­ல­கப் பய­ணங்­கள் எதிர்­பார்க்­கப்­பட்­ட­தற்கு முன்­பா­கவே தொட­ர­லாம்.

"இதன்­மூ­லம் சிட்னி வழி­யாக வீடு திரும்ப விரும்­பும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஆஸ்­தி­ரே­லி­யர்­க­ளுக்கு இல்­லத் தனிமை

உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­படும்.

"முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஆஸ்­தி­ரே­லி­யர்­கள் அனைத்­து­ல­கப் பய­ணங்­களை மேற்­கொள்­ள­லாம்," என்று திரு மோரி­சன் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் காணொளி மூலம் தெரி­வித்­தார்.

அனைத்துலக எல்லைகள் எப்போது திறந்துவிடப்படும் என்று திரு மோரிசன் தெரிவிக்கவில்லை. இருப்பினும், அடுத்த மாதம் 1ஆம் தேதியன்று அவை திறந்துவிடப்படக்கூடும் என்று News.com.au தெரிவித்தது.

நீர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே அனைத்துலகப் பயணங்களுக்கான தடை அடுத்த மாதம் நீக்கப்படும் என்று பிரதமர் மோரிசன் இம்மாதத் தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.

கிட்­டத்­தட்ட 100 நாள் முடக்­க­நி­லைக்­குப் பிறகு வழக்­க­நி­லைக்­குத் திரும்ப சிட்னி தயா­ராகி வரு­வ­தாக அந்­ந­க­ரின் அதி­கா­ரி­கள் கூறி­னர். இன்று முதல், முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோரை வர­வேற்க வர்த்­த­கங்­கள் தயா­ராக இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

நேற்­றைய நில­வ­ரப்­படி ஆஸ்­தி­ரே­லி­யா­வில் மேலும் 477 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. கிரு­மித்­தொற்று கார­ண­மாக மேலும் ஆறு பேர் உயி­ரி­ழந்­த­னர்.

இருப்­பி­னும், மாநி­லத்­தின் மக்­கள்­தொ­கை­யில் 70 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­தால் சில கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­த­வும் பெரும்­பா­லான வர்த்­த­கங்­களை மீண்­டும் திறக்­க­வும் தயா­ராக இருப்­ப­தாக நியூ சவுத் வேல்ஸ் முதல்­வர் டோமி­னிக் பெரோட்­டட் கூறி­னார்.

கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டா­லும் கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க சமூக இடை­வெளி விதி­மு­றை­யும் பொது இடங்­களில் ஒன்­று­கூ­டு­வது தொர்­பாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள வரம்­பு­களும் தொட­ரும் என்­றார் அவர்.