கப்பல் கொள்கலனுக்குள் 126 குடியேறிகள்

குவாட்­ட­மாலா சிட்டி: கப்­பல் கொள்­க­ல­னுக்­குள் 126 குடி­யே­றி­களை குவாட்­ட­மாலா போலி­சார் கண்­டு­பி­டித்­த­னர். கொள்­க­ல­னில் பூட்­டப்­பட்டு கைவி­டப்­பட்ட அந்­தக் குடி­யே­றி­களில் பெரும்­பா­லா­னோர் ஹைட்டி நாட்­டைச் சேர்ந்­த­வர்­கள் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அந்­தக் குடி­யே­றி­கள் மெக்­சிக்­கோ­வுக்­குச் சென்று அங்­கி­ருந்து அமெ­ரிக்­கா­வுக்­குச் செல்ல திட்­ட­மிட்­டி­ருந்­த­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். குவாட்­ட­மா­லா­வின் தென்­ப­கு­தி­யில் உள்ள இரு நக­ரங்­க­ளுக்கு இடை­யி­லான சாலை­யில் கப்­பல் கொள்­க­லன் ஒன்று கைவி­டப்­பட்ட நிலையில் இருப்­பது குறித்து போலி­சா­ருக்­குத் தக­வல் கிடைத்­ததை அடுத்து, அதி­கா­ரி ­கள் அங்கு விரைந்­த­னர்.

"கொள்­க­ல­னி­லி­ருந்து அழு­கைச் சத்­தம் கேட்­டது. உள்­ளி­ருந்து பலர் கொள்­க­ல­னைத் தட்டி உதவி கேட்டு கத்­தி­னர். பூட்டை உடைத்து கத­வைத் திறந்து பார்த்­த­போது 126 குடி­யே­றி­கள் இருப்­ப­தைக் கண்டு அதிர்ந்­தோம். 106 பேர் ஹைட்­டி­யி­லி­ருந்­தும், 11 பேர் நேப்­பா­ளத்­தி­லி­ருந்­தும் ஒன்­பது பேர் கானாவிலிருந்­தும் வந்­த­வர்­கள்," என்­றும் குவாட்­டா­மாலா போலி­சார் தெரி­வித்­த­னர்.

கடும் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளான அந்­தக் குடி­யே­றி­கள் குவாட்­டா­மாலா குடி­நு­ழைவு ஆணை­யத்­துக்­குச் சொந்­த­மான காப்­ப­கத்­தில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!