கோலாலம்பூர்: மலேசியாவில் புதிதாக 6,709 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
இவ்வாண்டு ஜூலை 5ஆம் தேதிக்குப் பிறகு, ஒருநாளில் அங்கு பதிவான ஆகக் குறைவான கொரோனா பாதிப்பு இதுதான். ஜூலை 5ஆம் நாளன்று 6,387 பாதிப்புகள் பதிவாகி இருந்தன.
இதனிடையே, மலேசியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோரில் 90 விழுக்காட்டினர்க்குமேல், அதாவது 21,073,042 பேர்க்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியவர்களில் இன்னும் 5.2 விழுக்காட்டினர், அதாவது 1,224,080 பேர் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

