நேஷன்ஸ் லீக்: வாகை சூடியது பிரான்ஸ் அணி

நேஷன்ஸ் லீக்: வாகை சூடியது பிரான்ஸ் அணி

1 mins read
684cf7c0-e534-4ffb-a14d-a497684972fa
வெற்றிக் கிண்ணம் தங்கள் வசமான மகிழ்ச்சியில் பிரான்ஸ் அணியினர். படம்: ஏஎஃப்பி -

மிலான்: ஐரோப்­பிய நாடு­க­ளுக்­கான நேஷன்ஸ் லீக் காற்­பந்­துத் தொட­ரின் இறு­திப் போட்­டி­யில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்­கில் ஸ்பெ­யினை வீழ்த்தி, கிண்­ணத்­தைக் கைப்­பற்­றி­யது.

முற்­பாதி ஆட்­டத்­தில் ஸ்பெ­யின் ஆதிக்­கம் செலுத்த, பிரான்ஸ் தடு­மா­றி­யது.

இரண்­டாம் பாதி­யின் 20வது நிமி­டத்­தில் மிக்­கெல் ஒயர்­ஸ­பல் அடித்த கோலால் ஸ்பெ­யி­ன் முன்­னிலை பெற்­றது.

இருப்­பி­னும், நடுக்­கள ஆட்டக்­கா­ரர் பால் போக்­பா­வின் அரு­மை­யான செயல்­பா­டும் இளம் வீரர் கிலி­யன் எம்­பாப்­பே­யின் துடிப்­பான ஆட்­ட­மும் பிரான்சை மீண்­டெ­ழச் செய்­தன.

தாக்­கு­தல் ஆட்­டக்­காரர் கரிம் பென்­சி­மா­வும் ஸ்பெ­யி­னுக்கு அச்­சு­றுத்­த­லாக விளங்­கி­னார்.

66வது நிமி­டத்­தில் பென்­சிமா போட்ட கோலால் ஆட்­டம் சம­நிலைக்கு வந்­தது. ஆட்­டம் முடிய பத்து நிமி­டங்­கள் இருந்­த­போது தமது அபா­ர­மான கோல் மூலம் பிரான்ஸ் அணியை முன்­னி­லை பெறச் சென்­றார் எம்­பாப்பே.

அதன்­பின் வெகுண்­டெ­ழுந்து ஆடி, பிரெஞ்சு அணி­யின் கோல் வலையை முற்­று­கை­யிட்­ட­னர். ஆனா­லும், பிரெஞ்சு அணித்­தலை­வ­ரும் கோல்­காப்­பா­ள­ரு­மான ஹியூகோ லோரிஸ், ஸ்பெ­யி­னின் இரு கோல் முயற்­சி­களை அற்­பு­த­மாக முறி­ய­டித்து, கிண்­ணம் தமது அணி­யின் கைசேர்­வதை உறு­திப்­ப­டுத்­தி­னார்.

முன்­ன­தாக, நடந்த மூன்­றாம் இடத்­திற்­கான ஆட்­டத்­தில் யூரோ கிண்ண வெற்றியாளரான இத்­தாலி 2-1 என்ற கோல் கணக்­கில் பெல்­ஜி­யத்­தைத் தோற்­க­டித்­தது.