மிரட்டும் ‘கொம்பாசு’ ‌சூறாவளி; தயார்நிலையில் நாடுகள்

மணிலா: தென்சீனக் கட­லில் உரு­வா­கி­யுள்ள 'கொம்­பாசு' சூறா­வளி மிக மோச­மான பாதிப்பை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்­துள்­ளது.

தீவி­ர­ம­டைந்­துள்ள 'கொம்­பாசு' சூறா­வ­ளி­யால் பிலிப்­பீன்­சில் கன­மழை பெய்து வரு­கிறது. மணிக்கு 100 கி.மீ வேகத்­தில் காற்று வீசி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. வெள்­ளப்­பெ­ருக்கு, நிலச்­ச­ரி­வு­களில் சிக்கி 11 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

இதற்­கி­டையே, சூறா­வளி எச்­ச­ரிக்கை கார­ண­மாக சீனா­வின் ஷென்­செ­னில் உள்ள யான்­டின் துறை­மு­கத்­தில் அன்­றாட நட­வ­டிக்­கை­கள் நிறுத்­தப்­பட்­டுள்­ளன.

ஹாங்­காங்­கி­லும் உச்­ச­பட்ச புயல் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அங்கு முன்­னெச்­ச­ரிக்­கை­யாகப் பள்­ளி­க­ளுக்கு விடு­முறை அறிவிக்கப்பட்­டுள்­ளது.

மூன்று நாட்­க­ளுக்­குள் ஹாங்­காங்­கைத் தாக்­க­வுள்ள 2­வது சூறா­வளி இது. சென்ற வாரம் வீசிய லயன்­ராக் சூறா­வ­ளி­க்கு ஒருவர் மாண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!