லங்காவி செல்வதற்கு கொவிட்-19 பரிசோதனை கட்டாயமல்ல

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வின் பிர­பல சுற்­று­லாத்­த­ல­மான லங்­கா­விக்­குச் செல்­லும் பய­ணி­கள், புறப்

படு­வ­தற்­கு­முன் கட்­டாய கிரு­மித் தொற்­றுப் பரி­சோ­தனை செய்ய தேவை­யில்லை என்று மலே­சிய சுகா­தார அமைச்சு நேற்று கூறி­யது.

லங்­கா­விக்­குப் புறப்­ப­டு­வ­தற்கு முன்பு விமான நிலை­யங்­கள், படகு முனை­யங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட பரி­சோ­த­னை­க­ளின்­போது 0.4% பய­ணி­க­ளுக்கு மட்­டுமே தொற்று உறு­தி­செய்­யப்­பட்­ட­தால், கட்­டாய பரி­சோ­த­னையை நீக்­கு­வ­தா­கச் சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் கூறி­னார்.

அக்­டோ­பர் 10ஆம் தேதி நில­வ­ரப்­படி, 54,341 சுற்­று­லாப் பய­ணி­கள் கொவிட்-19 பரி­சோ­த­னைக்கு உட்

படுத்­தப்­பட்­ட­தா­க­வும் அவர்­களில் 216 பய­ணி­க­ளுக்கு மட்­டுமே தொற்று உறு­தி­செய்­யப்­பட்­ட­தா­க­வும் அவர் சொன்­னார்.

"லங்­கா­வி­யில் இருந்­த­போது ஒரு சுற்­று­லாப் பய­ணிக்கு மட்­டுமே தொற்று அறி­கு­றி­கள் ஏற்­பட்டு தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

"லங்­கா­வி­யி­லி­ருந்து தொற்று பர­வ­வில்லை என்­பது தர­வு­க­ளின் மூலம் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது," என்­றார் அவர்.

ஆனால் கிரு­மிப் பர­வ­லைத் தடுக்­கும் வகை­யில் சுற்­று­லாப் பய­ணி­கள் தாங்­களே சுய­ப­ரி­சோ­தனை செய்­து­கொள்­வதை ஊக்­கு­விப்­ப­தா­க­வும் அவர் சொன்­னார்.

அத்­து­டன் பய­ணி­கள் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­ட­வர்­க­ளாக இருக்க வேண்­டும் என்­ப­தில் எந்த மாற்­ற­மு­மில்லை என்­ப­தை­யும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

இதற்­கி­டையே, மாநி­லங்­க­ளுக்கு இடை­யி­லான பய­ணம் நேற்று முன்­தி­னம் முதல் மீண்­டும் தொடங்­கி­ய­தில் இருந்து மலே­சி­யா­வின் முக்­கிய நெடுஞ்­சா­லை­களில்

போக்­கு­வ­ரத்து குறிப்­பி­டத்­தக்க அளவு அதி­க­ரித்­துள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார். நெடுஞ்­சா­லை­களில் ஒட்­டு­மொத்­த­மா­கப் போக்­கு­வ­ரத்து 14% அதி­க­ரித்­துள்­ளது.

மேலும் தர­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் கிருமி பர­வு­வ­தற்­கான சாத்­தி­யம் குறித்­தும் அர­சாங்­கம் தொடர்ந்து அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­வ­தாக அவர் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!