ஹாங்காங்: வர்த்தக நிறுவனங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு

ஹாங்காங்: வர்த்தக நிறுவனங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு

1 mins read
e13c3aea-9f45-4616-a8a4-3009a09c7f19
-

ஹாங்­காங்: ஹாங்­காங்­கில் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் கூடுதல் நேரம் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்ட வாடிக்கையாளர்களை மேலும் அதிகமாகவும் அனுமதிக்க முடியும்.

ஆனால், ஹாங்­காங்­கின் அனைத்­து­லக எல்­லை­யைத் திறக்க கோரி அழுத்­தம் அதி­க­ரித்­தா­லும், அதற்குத் தொடர்ந்து மறுத்து வருகிறார் தலைமை நிர்­வாகி கேரி லாம். வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்த ஏழு பேருக்கு நேற்று தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தல் இல்லாமல் பயணிகளை அனுமதிப்பது என்பது தொற்றுப் பரவல் அதிகரிப்பதற்கான வழி என்று அவர் சொன்னார்.