நாணய வீழ்ச்சியால் மோசமாகும் மியன்மார் பொருளியல்

யங்­கூன்: மியன்­மார் நாண­யத்­தின் வீழ்ச்­சி­யால் அந்­நாட்­டின் பொரு­ளி­யல் சிக்­கல் மோச­ம­டைந்து வரு­கிறது. அந்­நாட்­டில் ஏற்­பட்­டுள்ள விலை ஏற்­றத்­தால் உண­வுப்­பொ­ருட்­கள், எண்­ணெய் ஆகி­ய­வற்­றின் விலை­ கூடி, மக்­க­ளுக்கு அதிக சிர­மத்தை ஏற்­ப­டுத்தி வரு­கிறது.

கடந்த பிப்­ர­வரி மாதம் ராணு­வம் நடத்­திய ஆட்­சிக் கவிழ்ப்­புக்­குப் பின்­னர் மியன்­மா­ரின் கியட் நாண­யம் அமெ­ரிக்க டால­ருக்கு எதி­ரான அதன் மதிப்­பில் மூன்­றில் ஒரு பங்கை இழந்­துள்­ளது. கடந்த மாதம், அது ஆகக் குறை­வாக ஒரு அமெ­ரிக்க டால­ருக்கு 2,700 என்று பரி­வர்த்­தனை செய்­யப்­பட்­டது. நேற்று ஒரு மியன்­மார் கியட், 1,426.94 சிங்­கப்­பூர் வெள்­ளிக்கு பணப் பரி­வர்த்­தனை ஆனது.

மியன்­மார் நாண­யத்­தின் மதிப்­பைத் தூக்கி நிறுத்த ராணுவ ஆட்­சி­யா­ளர்­கள் தங்­க­ளி­ட­மி­ருந்த அமெ­ரிக்க டாலரை (S$257.4 மில்­லி­யன்) விற்­று­விட்­ட­னர். ஆனால் கியட் நீண்டகால ­நோக்­கில் மேலும் சரி­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அந்­நாட்­டுப் பொரு­ளி­யல் கடந்த நிதி­யாண்­டில் 18.7% வீழ்ச்சி கண்­டது. பண­வீக்­க­மும் வெகு­வாக அதி­க­ரித்­துள்­ளது.

ஆட்­சிக் கவிழ்ப்­புக்­குப் பின்­னர் ஏற்­கெ­னவே அதி­க­ரித்த விலை­கள், இம்­மா­தம் வெகு­வா­கக் கூடின. அவ­சி­ய­மற்ற உணவை வாங்­கு­வ­தை­யும் மோட்­டார்­சைக்­கிள் போன்ற வாக­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தை­யும் குறைத்­துள்­ள­தாக மியன்­மார் மக்­கள் கூறி­னர்.

ஓய்­வு­பெற்ற முதி­ய­வ­ரான திரு வாட்டி ஆய், வங்­கிச் சேமிப்­பில் உள்ள பணம் ஓய்­வு­கா­லத்­தைச் சமா­ளிக்க உத­வும் என்று நினைத்­தார். ஆனால், வங்­கி­களில் இருக்கும் பணத்தை வெளி­யில் எடுக்க ராணுவ அர­சாங்­கம் 200,000 கியட் (S$140) எனும் உச்­ச­வ­ரம்பை விதித்­துள்­ளது. பணத்தை எடுக்க வங்­கி­களில் வரிசை நீண்­டி­ருக்­கிறது. அத­னால் கையில் உள்ள காசைக் கொண்டு காலத்தை ஓட்டு ­வ­தாக திரு­வாட்டி ஆய் கூறி­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!