சிட்னியில் முன்கூட்டியே தளர்வுகள்; வடக்குப் பிரதேசத்தில் கட்டாயத் தடுப்பூசி

சிட்னி: சிட்­னி­யில் கொவிட்-19 கட்டுப்­பா­டு­கள் திட்­ட­மிட்­ட­தை­விட விரை­வாக, வரும் 18ஆம் தேதி திங்­கட்­கி­ழமை மேலும் தளர்த்­தப்­ப­ட­லாம் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர்.

அந்த மாநி­லத்­தின் 80 விழுக்­காட்டு மக்­கள்­தொ­கைக்கு இந்த வார­யி­று­தி­யில் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போடப்­பட்டுவிடும் என்று கரு­தப்­ப­டு­கிறது.

தடுப்பூசி இலக்கை அடைந்த பின்­னர் அடுத்து வரும் திங்­கட்­கி­ழ­மை­யில் தளர்­வு­கள் நடப்­புக்கு வரும் என்று மாநில அதி­கா­ரி­கள் ஏற்­கெ­னவே கூறி­யி­ருந்­த­னர்.

தளர்வு பற்றி இன்று விவா­திக்­கப்­பட்டு நாளை அறி­விக்­கப்­படும் என்று அந்த மாநி­லத்­தின் முதல் அமைச்­சர் டோமி­னிக் பெரோட்­டெட் ஏபிசி வானொ­லி­யி­டம் நேற்று தெரி­வித்­தார்.

கூடு­தல் தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்­டால், கடை­கள், கேளிக்கை விடு­தி­கள் உடற்­ப­யிற்­சிக் கூடங்­கள் போன்­ற­வற்­றில் தடுப்­பூசி போட்டுக் கொண்­ட­வர்­கள் இன்­னும் கூடு­ல­தாக அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள். அலு­வ­ல­கங்­களில் முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­ய­மாக இருக்­காது. திரு­ம­ணங்­களில் விருந்­தி­னர் உச்­ச­வ­ரம்­பும் இருக்­காது.

இதற்­கி­டையே, ஆஸ்­தி­ரே­லி­யா­வின் வடக்­குப் பிர­தே­சத்­தில் சேவைத் துறை ஊழி­யர்­க­ளுக்­குத் தடுப்­பூசி கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் பொதுமக்களுடன் தொடர்புகொள்ளும் வேலைகளைச் செய்ய அனு­ம­திக்­கப்­பட மாட்­டார்­கள் என்று வடக்­குப் பிர­தே­சத்­தின் முதல் அமைச்­சர் மைக்­கல் கன்­னர் கூறி­னார். அங்­குள்ள சில இடங்­களில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டோர் விகி­தம் மிகக் குறை­வாக உள்­ளது கவலை அளிப்­ப­தாக அவர் சொன்­னார்.

பெரும் பரப்­ப­ளவு கொண்ட வடக்­குப் பிர­தேசத்­தில் டார்­வின், ஆலிஸ் ஸ்பிரிங் நக­ரங்­கள் உள்­ளன. பூர்­வ­கு­டி­யி­னர் அதி­கம் வசிக்­கும் பகுதி அதுவாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!