சீனா: தைவான் வாக்குவாதம்

பெய்ஜிங்: தைவான் அருகே சீனா அண்­மை­யில் நடத்­திய ராணு­வப் பயிற்­சி­கள் அத்­தீவு அதி­கா­ர­பூர்வ சுதந்­தி­ரம் பெறு­வதை ஊக்கு­விக்­கும் சக்­தி­க­ளுக்கு எதி­ரா­னது என்­றும் அது அமை­தி­யை­யும் நிலைத்­தன்­மை­யையும் காக்­கும் 'நியா­ய­மான' நட­வ­டிக்கை என்­றும் சீனா­வின் தைவான் விவ­கா­ரங்களுக்­கான அலு­வ­ல­கம் கூறி­யுள்­ளது.

அந்த அலு­வ­ல­கத்­தின் பேச்­சா­ளர் மா சியாவ்­கு­வாங் நேற்று செய்தி­யா­ளர் சந்­திப்­பில் இதைத் தெரி­வித்­தார். சீனாவின் ராணு­வப் பயிற்சி தைவா­னுக்கு அமெரிக்கா தரும் ஆத­ர­வுக்கு எதி­ரா­னது என்­றும் அவர் கோடி­காட்­டி­னர்.

ஆனால் ஊடு­ரு­வல்­கள் தீவை நெருங்­கி­னால் கடுமையான பதில் நட­வ­டிக்கையை எடுக்­கப்­போ­வ­தாக தைவானிய தற்காப்பு அமைச்சு நேற்று கூறியது.

சீனா, இம்­மா­தம் முதல் தேதி தொடங்கி தொடர்ந்து நான்கு நாட்­க­ளுக்கு தைவான் அரு­கே பல ஆகா­யப்­படை விமா­னங்­களை அனுப்பி வைத்­தது.

அந்­நாடு, தைவான் தமக்­குச் சொந்­த­மான நிலப்­ப­ரப்பு என்று பல­ஆண்­டு­க­ளா­கக் கூறி­வ­ரு­கிறது.

சீனா­வுக்­கும் தைவா­னுக்­கும் இடை­யி­லான ராணு­வப் பதற்­றம் 40 ஆண்­டு­களில் மிக மோச­மான நிலை­யில் உள்­ள­தாக தைவா­னின் தற்­காப்பு அமைச்­சர் கடந்த வாரம் கூறி­னார். வரும் 2025ஆம் ஆண்­டுக்­குள் தைவா­னுக்கு எதி­ராக முழுத் தாக்­கு­தலை நடத்­தும் ஆற்­றலைச் சீனா பெற்­றி­ருக்­கும் என்­றும் அவர் எச்­ச­ரித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!