ஜோகூர் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையில் தீச்சம்பவம்

ஜோகூர் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையில் தீச்சம்பவம்

1 mins read
c03a8916-c763-4f72-901b-586aa698a35e
-

கோத்தா திங்கி: கோத்தா திங்­கி­யில் உள்ள ஜாலான் கூலாய்- கோத்தா திங்கி வட்­டா­ரத்­தில் உள்ள செமாங்­கார் தண்­ணீர் சுத்­தி­க­ரிப்பு ஆலை­யில் நேற்று தீச்­சம்­ப­வம் ஏற்­பட்­டது.

கூலா­யி­லும் இஸ்­கந்­தார் புத்­திரி வட்­டா­ரத்­தி­லும் உள்ள 200 இடங்­களில் தண்­ணீர் விநி­யோ­கம் தடை­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

சினாய், ஸ்கூ­டாய், பூலாய், கெம்­பாஸ், நுசா­ஜயா, கெலாங் பாத்தா போன்ற இடங்­கள் பாதிக்­கப்­பட்­ட­தாக ரான்­ஹில் தண்­ணீர் விநி­யோக நிறு­வ­னம் கூறி­யது.

தீச் சம்­ப­வத்­தால் ஆலை­யின் செயல்­பா­டு­கள் நின்றுபோன­தாக அது தெரி­வித்­தது. தீ அணைக்­கப்­பட்டுவிட்­டது என்­றும் யாருக்­கும் அதில் காய­மில்லை என்­றும் கூறப்பட்டது. தண்­ணீர் விநி­யோ­கத்தைக் கட்­டம் கட்­ட­மாக தொடங்கப்போவ­தா­க­வும் அது தெரிவித்தது.