பல்லுயிர்களின் இழப்பை ஈடுகட்ட 195 நாடுகள் உறுதி

பல்லுயிர்களின் இழப்பை ஈடுகட்ட 195 நாடுகள் உறுதி

1 mins read
46325ec3-9b9e-4b33-9f66-34adca6b94ce
-
Google News Preferred Icon

குன்மிங்: பல்வகை உயிரினங்களின் இழப்பை மாற்றி அவற்றை மீண்டும் பல்கிப் பெருகச் செய்ய சுமார் 195 உலக நாடுகள் பெரும் இலக்கு கொண்ட திட்டத்தை உருவாக்கியுள்ளன. இவ்வாண்டின் ஆகப் பெரும் சவாலைச் சமாளிக்க வலுவான அரசியல் உத்வேகம் தேவை என்று அவை கூறின.

சீனாவின் குன்மிங் நகரில் நேற்று நடந்த 'சிஓபி15' எனும் ஐக்கிய நாட்டு நிறுவன பல்லுயிர்த்தன்மை மாநாட்டில் அந்த நாடுகள் பற்றுறுதியை எடுத்துக்கொண்டன. குன்மிங் பற்றுறுதி என்று அதற்குப் பெயரிடப்பட்டது.

பல்லுயிர்த்தன்மை குறித்த ஆகப் பெரிய மாநாடான அது, தற்போது இணையம் வழியாகவும் அடுத்த ஆண்டு நேரடியாகவும் நடைபெறும்.