ஹங்கேரியைச் சமாளிக்கத் திணறிய இங்கிலாந்து

லண்­டன்: உல­கக் கிண்ண காற்­பந்து தகு­திச்­சுற்று ஆட்­டம் ஒன்­றில் நேற்று அதி­காலை ஹங்­கே­ரியை எதிர்­கொண்ட இங்­கி­லாந்து அந்­நாட்டை வெற்­றி­கொள்ள முடி­யா­மல் திணறி 1-1 என சம­நிலை கண்­டது.

'ஐ' பிரி­வில் இன்­னும் இரண்டு ஆட்­டங்­கள் உள்ள நிலை­யில், இங்­கி­லாந்து இரண்­டாம் இடத்­தில் இருக்­கும் போலந்தை விட மூன்று புள்­ளி­கள் அதி­கம் பெற்று முன்­ன­ணி­யில் இருப்­பது அதற்கு சாத­க­மான நிலையே.

எனி­னும், திக்­கித் தடு­மாறி ஹங்­கே­ரி­யு­டன் சம­நிலை கண்­டது இங்­கி­லாந்து ரசி­கர்­க­ளுக்கு ஏமாற்­ற­மாக விளங்­கு­கிறது.

ஆட்­டம் தொடங்­கி­ய­போது போலந்து நாட்டு ரசி­கர்­க­ளுக்­கும் லண்­டன் போலி­சா­ருக்­கும் இடையே கல­கம் மூண்­டது. இதில் போலி­சாரை அச்­சு­றுத்­திய ஹங்­கேரி நாட்டு ரசி­கர்­களை அடக்க கல­கத் தடுப்பு போலி­சார் வர­வ­ழைக்­கப்­பட்­ட­னர்.

ஆட்­டத்­தின் 24ஆம் நிமி­டத்­தில் இங்­கி­லாந்­தின் லுக் ஷா என்ற ஆட்­டக்­கா­ர­ரின் தப்­பாட்­டத்­தால் ஹங்­கே­ரிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரி­யா­கப் பயன்­ப­டுத்­திக் கொண்ட ரோலண்ட் சாலாய் என்ற வீரர் கோலாக மாற்றி ஹங்­கே­ரிக்கு முன்­னிலை பெற்­றுத் தந்­தார்.

இதை அடுத்து ஆட்­டத்­தின் 37ஆம் நிமி­டத்­தில் 'ஃபிரீகிக்' வாய்ப்­பில் ஃபில் ஃபோடன் கொடுத்த பந்தை ஜான் ஸ்டோன்ஸ் என்­ப­வ­ருக்கு டைரோன் மிங்ஸ் என்ற வீரர் தட்­டி­விட அவர் இங்­கி­லாந்து சார்­பாக கோல் போட்டு ஆட்­டத்தை 1-1 என சம­நி­லைப்­ப­டுத்­தி­னார்.

"ஆட்­டம் சம­நி­லை­யில் முடிந்­த­தால் நாங்­கள் சரி­யாக விளை­யா­ட­வில்லை என்று கூற­லாம். ஆனால் ஆட்­டத்­தில் நாங்­கள் ஆதிக்­கம் செலுத்­தி­னோம்.

"ஹங்­கே­ரிக்கு பெனால்டி வாய்ப்பு கொடுத்­தது முட்­டாள்­த­ன­மா­னது. சில சம­யங்­களில் எதி­ர­ணிக்­கும் நாம் மதிப்­புக் கொடுக்க வேண்­டும். ஹங்­கே­ரியை அந்த நாட்­டில் அவர்­க­ளு­டன் விளை­யா­டி­ய­தை­விட இங்கு அந்­நாட்­டுக் குழு நன்­றா­கவே விளை­யா­டி­யது," என்று இங்­கி­லாந்து மத்­திய திடல் ஆட்­டக்­கா­ர­ரான டெக்­லன் ரைஸ் கருத்­து­ரைத்­தார்.

இங்­கி­லாந்­துக் குழு­வில் அபார திற­மை­சா­லி­யான வீரர்­கள் இருந்­தும் அவர்­கள் முழுத் திற­னு­டன் விளை­யா­ட­வில்லை என்று காற்­பந்து விமர்­ச­கர்­கள் கூறு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!