நார்வேயில் அம்பெய்து ஐவரைக் கொன்றவர் கைது

நார்வேயில் அம்பெய்து ஐவரைக் கொன்றவர் கைது

1 mins read
cf2c7c36-0076-4406-96da-40d8b707477a
-

நார்வேயில் தென் கிழக்கே கொங்ஸ்பெர்க் நகரில் அம்பு எய்து ஐந்து பேரைக் கொன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். 37 வயதான அந்த ஆடவர் டெனிஷ் நாட்டவர் அன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற இந்தத் தாக்குதல் சம்பவத்தில், பணியில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். நார்வே தாக்குதல் நடத்தியவர் தனியாகவே செயல்பட்டிருக்கிறார் என்று குறிப்பிட்ட காவல்துறை, தாக்குதலுக்கான காரணம் குறித்து தெரிவிக்கவில்லை. கைதின்போது காயமடைந்த அந்த ஆடவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தலைநகர் ஓஸ்லோவிலிருந்து 68 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அந்நகரின், பேரங்காடி உட்பட வெவ்வேறு இடங்களில் அரை மணி நேரத்துக்கும் அதிகமாக அந்த ஆடவர் அம்புத் தாக்குதலை நடத்தியுள்ளார். சுவர்களில் அம்பு பாய்ந்த அடையாளங்கள் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் எட்டு ஆம்புலன்ஸ் வாகனங்களும் மூன்று ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. நகரம் எங்கும் ஆயுதம் ஏந்திய காவல்துறையில் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்தனர். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் உத்தோயா தீவில், இளையர் முகாமொன்றி தீவிரவாதியான ஆண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக் 77 பேரைக் கொன்ற படுகொலைக்குச் சம்பவத்திற்குப் பிறகு நடந்துள்ள மோசமான தாக்குதலாக இந்தச் சம்பவம் கருதப்படுகிறது. பொதுவாக ஸ்கன்டிநேவியன் நாடுகளில் காவல்துறையினர் துப்பாக்கியுடன் பணி புரிவதில்லை. நேற்றைய சம்பவத்தை அடுத்து அனைத்து காவல்துறைப் பணியாளர்களும் ஆயுதம் வைத்திருக்குமாறு என்று நார்வே காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டிருக்கிறது.