செய்திக்கொத்து

2 mins read
1ccdd22e-1e67-457e-b764-1629a53473e4
-

மெல்பர்னில் முடிவுக்கு

வருகிறது முடக்கநிலை

சிட்னி: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள மெல்பர்ன் நகரில் பல மாதங்களாக நடப்பில் இருந்த கொரோனாவுக்கு எதிரான முடக்கநிலை அடுத்த வாரத்தில் முடிவுக்கு வரவுள்ளது என்று அம்மாநிலத்தின் முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் நேற்று கூறியுள்ளார்.

தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்தபோதும், தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டுள்ளோர் விகிதம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகரித்துள்ளதை அடுத்து முடக்கநிலையை முடிவுக்குக் கொண்டுவரும் முடிவை அம்மாநிலம் எடுத்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் டெல்டா வகை உருமாறிய கிருமித்தொற்று பரவத் தொடங்கியது. நேற்று அங்கு தினசரி தொற்று 2,297ஆக பதிவாகியுள்ளது. இது அதற்கு முந்தைய நாளில் 1,571 ஆக இருந்தது. மேலும் 11 பேர் தொற்றுப் பாதிப்பால் மரணமடைந்தனர்.

நியூசிலாந்தில் தினசரி தொற்று அதிகரிப்பு

வெல்லிங்டன்: நியூசிலாந்தில் கடந்த ஒரு வாரத்தில் இல்லாத வகையில் தொற்று எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆக்லாந்தைச் சேர்ந்தவர்கள். இதனால் அங்கு கொரோனா தொற்றுக்கு எதிரான முடக்கநிலை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்லாந்தில் வாழும் மக்களில் கிட்டத்தட்ட 1.7 மில்லியன் பேர், தொற்றுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளால் வரும் திங்கள்கிழமை வரை வீட்டிற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

"ஆக்­லாந்­தில் தின­சரி தொற்று அதி­க­ரிப்பு என்­பது எதிர்­பார்க்­கப்­ப­டாத ஒன்று. கிரு­மிப்­ப­ர­வல் அதி­வே­க­மாக நிகழ்ந்­து­கொண்­டுள்­ளது. இதற்கு, சட்­ட­வி­ரோ­த­மாக ஒன்­று­கூ­டு­வ­தும் கார­ண­மாக இருக்­க­லாம்," என்று நியூசிலாந்துப் பிர­த­மர் கிராண்ட் ராபர்ட்­சன் கூறி­யுள்­ளார்.

தாய்லாந்து: சுற்றுப்பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இனி இல்லை

பேங்காக்: சிங்கப்பூர், அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், சீனா ஆகிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து நவம்பர் 1ஆம் தேதி முதல் விலக்கு அளிப்பதாக தாய்லாந்து அறிவித்துள்ளது.

மேலும் பல நாடுகளை இந்தப் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாய்லாந்து பாதிக்கப்பட்டுள்ள தனது சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் அளிக்கும் விதத்தில் சில நாடுகளில் இருந்து வரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுப்பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கும் திட்டத்திற்கு அந்நாட்டின் கொவிட்-19 கட்டுப்பாட்டுக் குழு அனுமதி அளித்துள்ளது. அதனையடுத்து இந்தத் திட்டம் நவம்பர் மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.