எல்லை திறப்பு பற்றி மலேசியா பரிசீலனை

எல்லை திறப்பு பற்றி மலேசியா பரிசீலனை

1 mins read
c462f646-2ed2-46f9-8770-6836deec29da
-

கோலா­லம்­பூர்: தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட சில நாடு­க­ளைச் சேர்ந்த பய­ணி­க­ளுக்கு எல்­லை­க­ளைத் திறந்­து­ விடு­வது பற்றி மலே­சிய அர­சாங்­கம் பரி­சீ­லித்து வரு­கிறது.

அத்­த­கைய பய­ணி­கள் கொவிட்-19க்கு எதி­ராக முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருக்க வேண்­டும். தேசிய மீட்சி மன்­றத்­தின் தலை­வர் முகை­தீன் யாசின் இதனை நேற்று தெரி­வித்­தார்.

இரு­நா­டு­க­ளுக்கு இடையே தடுப்­பூ­சிச் சான்­றி­தழ்­கள் அங்கீ கரிக்­கப்­ப­டு­வ­தன் பொருட்டு இந்த ஏற்­பாடு பரி­சீ­லிக்­கப்­ப­டு­வ­தாக அவர் கூறி­னார்.

"முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட, அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட மின்­னி­லக்­கத் தடுப்­பூ­சிச் சான்­றி­தழ் உடை­யோ­ருக்கு எல்­லை­கள் திறந்­து­வி­டப்­ப­ட­லாம்.

"புறப்­பாட்­டிற்கு முந்­திய கொவிட்-19 பரி­சோ­தனை முடி­வு­கள் தேவைப்­ப­ட­லாம். ஆனால், மலே­சியா வந்­தி­றங்­கி­ய­தும் பய­ணி­கள் கட்­டா­ய­மாக தனி­மைப் படுத்­திக்­கொள்ள வேண்­டிய தேவையை நீக்­கு­வது அல்­லது அவர்­கள் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டிய காலத்­தைச் சுருக்­கு­வது பற்றி நாங்­கள் பரி­சீ­லித்து வரு­கி­றோம். இது­கு­றித்து விரை­வில் முடிவு எடுக்­கப்­படும்," என்­றார் திரு முகை­தீன்.

எல்லை திறப்பு பற்றி மலே­சி­யப் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப்­பின் தலை­மை­யி­லான பணிக்­குழு நேற்று விவா­தித்­ததா­க­வும் திரு முகை­தீன் கூறி­னார்.

இவ்­வே­ளை­யில் மலே­சி­யா­வில் அன்­றாட கொவிட்-19 தொற்று எண்­ணிக்­கை­ குறைந்து வரு­வ­தாக அந்­நாட்டு சுகா­தார அமைச்­சர் கைரி ஐமா­லு­தீன் கூறி­னார். தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் விகி­த­மும் அதிகமாகி வரு­வது நல்ல அறி­குறி என்­றார் அவர்.

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கும் வசதி குறைந்தவர்களுக்கும் உதவி வழங்குவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.