நஜிப் ரசாக்கின் மனைவி சிங்கப்பூர் வர அனுமதி

நஜிப் ரசாக்கின் மனைவி சிங்கப்பூர் வர அனுமதி

1 mins read
0784a683-128f-4f8e-bcfe-3ed35fedc83d
-

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி திருவாட்டி ரோஸ்மா மன்சூர் சிங்கப்பூர் வரும் பொருட்டு அவரது கடவுச்சீட்டு அவரிடம் தற்காலிகமாக திரும்பி ஒப்படைக்கப்படும்.

சிங்கப்பூரில் இருக்கும் திருவாட்டி ரோஸ்மாவின் மகளுக்கு விரைவில் குழந்தை பிறக்கவுள்ளது. அவருக்கு நிறைய உடல்நலச் சிக்கல்கள் உள்ளன.

கடவுச்சீட்டைக் கோரி திருவாட்டி ரோஸ்மா அளித்த விண்ணப்பத்தை நேற்று ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், டிசம்பர் 6ஆம் தேதி மீண்டும் அரசாங்கத்திடம் அதை ஒப்படைக்கவேண்டும் என்று கூறியது.

இவ்வேளையில் திரு நஜிப் ரசாக்கும் தமது கடவுச்சீட்டைக் கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார்.

திரு நஜிப் மீதும் அவரது மனைவி மீதும் லஞ்ச ஊழல் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.