தைவானில் 46 பேர் மாண்ட தீ விபத்து பற்றி புலனாய்வு

தைவானில் 46 பேர் மாண்ட தீ விபத்து பற்றி புலனாய்வு

1 mins read
8d612de4-9474-4cc3-b36d-9cd90c77850d
-

தைவானின் கெளசியுங் நகரில் 46 பேர் உயிரிழந்த தீவிபத்து பற்றி புலனாய்வு செய்ய அதன் மேயர் பணிக்குழுவை அமைத்துள்ளார். வசதி குறைந்தோர் அதிகம் வசித்த பழைய அடுக்குமாடி கட்டடத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் தீச்சம்பவம் நடந்தது. தீயைக் கட்டுப்படுத்தும் முன்னர் பல மாடிகள் எரிந்துபோயின. மாண்டவர்களில் பலர், உடல்குறைபாடு, மறதிநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் ஆவர். படம்: ராய்ட்டர்ஸ்