4,000 பேருக்குத் தவறான கிருமிப் பரிசோதனை முடிவு

லண்­டன்: தனி­யார் ஆய்­வ­கத்­தில் நிகழ்ந்த தவறு கார­ண­மாக இங்­கி­லாந்­தில் கிட்­டத்­தட்ட 4,000 பேர்க்கு 'கொரோனா இல்லை' என பரி­சோ­தனை முடி­வு­கள் தவறாக அளிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம் எனத் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

இதைத் தொடர்ந்து, உல்­வர்­ஹேம்­ட­னில் உள்ள அந்த ஆய்­வ­கம், தனது செயல்­பா­டு­களை நிறுத்­தி­வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டது.

கடந்த மாதம் 8ஆம் தேதி முதல் இம்­மா­தம் 12ஆம் தேதி­வரை அந்த ஆய்­வ­கம் வழங்­கிய பரி­சோ­தனை முடி­வு­களில் தவறு நிகழ்ந்­தி­ருக்­க­லாம் எனக் கூறப்­ ப­டு­கிறது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் பெரும்­பான்­மை­யோர் தென்­மேற்கு இங்­கி­லாந்­து­வா­சி­கள்.

ஆனால், வேல்ஸ் நாட்­டி­லும் இத­னால் பல்­லா­யி­ரம் பேர் பாதிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என அந்­நாட்டு அர­சாங்­கம் தெரி­வித்­துள்­ளது.

இதன் கார­ண­மாக, வேல்­சி­லும் இங்­கி­லாந்­தி­லும் கொரோனா தொற்­றிய ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் தனி­மைப்­ப­டுத்­து­வதை நிறுத்­திக்­கொள்­ளும்­படி கேட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­னர் என்­றும் அவர்­கள் மூலம் தொற்று பரவி இருக்­க­லாம் என்­றும் அஞ்­சப்­ப­டு­கிறது.

இத­னை­ய­டுத்து, தவ­றான முடிவு அளிக்­கப்­பட்­ட­வர்­கள் மீண்­டும் ஒரு­முறை கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொள்­ளும்­படி கேட்­டுக்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­ற­னர்.

அந்த ஆய்­வ­கம் இது­வரை ஏறத்­தாழ 400,000 கொரோனா பரி­சோ­தனை மாதி­ரி­க­ளைக் கையாண்­டுள்­ள­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!