கோலாலம்பூர்: இம்மாதம் நடைபெற இருக்கும் தென்கிழக்காசிய உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள மியன்மார் ராணுவத் தலைவர் மிங் ஆங் ஹிலேங்கிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
மாறாக, அந்நாட்டிலிருந்து அரசியல் சார்பற்ற பிரதிநிதி ஒருவர் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்
பட்டுள்ளது.
இந்த முடிவை தென்கிழக்காசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கான சங்கம் நேற்று நடைபெற்ற அவசரநிலை கூட்டத்தில் எடுத்தது.
இதற்கு முன்பு இத்தகைய முடிவை சங்கம் எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் மியன்மாரில் அமைதி திரும்புவதற்காக வகுக்கப்பட்ட திட்டத்துக்கு உட்
படப் போவதாக மியன்மார் உறுதி அளித்திருந்தது.
ஆனால் கொடுத்த வாக்
குறுதியை மியன்மாரை ஆட்சி செய்து வரும் ராணுவம் நிறைவேற்றவில்லை.
மியன்மாரில் நடந்துவரும் வன்முறைச் சம்பவங்களை முடிவுக்குக் கொண்டு வர ஆசியான் கூடுதல் பங்காற்ற வேண்டும் என அனைத்துலக அளவில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் மியன்மார் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து அதற்கு எதிராக மியன்மார் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளனர்.
இதுவரை 1,000க்கும் மேற்பட்டோரை மியன்மார் பாதுகாப்புப் படையினர் கொன்றுவிட்டதாக ஐநா தெரிவித்துள்ளது.
"மியன்மாரில் அமைதி இன்னும் திரும்பவில்லை. எனவே நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மியன்மார் ஆட்சி
யாளர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ஆசியான் உறுப்பிய நாடுகள் பரிந்துரைத்துள்ளன," என்று ஆசியானுக்குத் தற்போது தலைமைதாங்கும் புருணை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, உச்சநிலை மாநாட்டுக்கு அரசியல் சார்பற்ற பிரதிநிதியை அழைக்க ஆசியான் எடுத்துள்ள முடிவுக்கு சிங்கப்பூர் ஆதரவு தெரிவித்துள்ளது.
"இது மிகவும் சிரமப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு. ஆனால் ஆசியானின் நம்பகத்தன்மையை நிலைநாட்ட இந்த முடிவு அவசியமானது," என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பால
கிருஷ்ணன் தெரிவித்தார்.
மியன்மாரில் வன்முறையை நிறுத்தவும் மனிதாபிமான உதவிகளை அனுப்பவும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டது.
ஆனால் அந்தத் திட்டத்தை மியன்மார் ராணுவம் இன்னும் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்றும் எவ்வித முன்னேற்றத்தையும் காண முடியவில்லை என்றும் அமைச்சர் விவியன் பால
கிருஷ்ணன் கூறினார்.
ஆசியானின் சிறப்புத் தூதரும் புருணையின் இரண்டாம் வெளி
யுறவு அமைச்சருமான திரு எரிவான் யூசோஃப் இம்மாதம் மியன்மாருக்குப் பயணம் மேற்கொள்ளமாட்டார் என ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இணைந்து முடிவெடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஆசியான் உச்சநிலை மாநாட்டுக்குத் தனது ராணுவத் தலைவர் அழைக்கப்படாததற்கு வெளிநாட்டுத் தலையீடு காரணம் என்று மியன்மார் ராணுவம் குறைகூறியுள்ளது.
இம்மாதம் 26ஆம் தேதியி
லிருந்து 28ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் உச்சநிலை மாநாட்டிலிருந்து மியன்மார் ராணுவத் தலைவரை விலக்கிவைக்க அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆசியான் நாடுகளுக்கு நெருக்குதல் தந்ததாக பிபிசி மியன்மார் செய்தி நிறுவனத்திடம் மியன்மார் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் ஸோ மின் துன் தெரிவித்தார்.

